News April 1, 2024
பெயரை மாற்றினால் சீனாவுக்கு சொந்தமா?

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களின் பெயரை மாற்றினால், அது சீனாவுக்கு சொந்தமாகிவிடாது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உங்கள் வீட்டின் பெயரை நான் மாற்றினால், அது எனக்கு சொந்தமாகி விடுமா எனக் கேள்வி எழுப்பிய அவர், சீனா பெயரிட்ட 30 இடங்களும் இந்தியாவுக்கே சொந்தம் என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், அருணாச்சல் எல்லையில் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Similar News
News January 11, 2026
தமிழ் எந்த பேதமும் காட்டாது: உதயநிதி

சாதி, மதம், முதலாளி, தொழிலாளி உள்ளிட்ட அனைத்தையும் தாண்டி நம்மை இணைத்திருப்பது தமிழ் தான் என்று DCM உதயநிதி கூறியுள்ளார். அயலக தமிழர் விழாவில் பேசிய அவர், தமிழ் மொழி யாரையும் வேறுபடுத்தி பார்க்காது, பேதமும் காட்டாது என்றார். மேலும், ஒன்றாக இணையாத எந்த இனமும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை என்ற உதயநிதி, அயலகத் தமிழர்களும் தங்களது கனவுகளை தமிழக அரசிடம் தெரிவிக்கலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News January 11, 2026
மகளிர் உரிமைத்தொகை உயர்வு.. இனிப்பான செய்தி

பொங்கல் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி ஒன்றை CM ஸ்டாலின் அறிவிப்பார் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, மகளிர் உரிமைத்தொகையை ₹2,000 ஆக உயர்த்தி வழங்க அரசு திட்டமிடுவதாக பேசப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் கொடுத்த இந்த அப்டேட், மகளிர் உரிமைத்தொகை உயர்வை பற்றியதாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
News January 11, 2026
₹31,500 மானியம் கிடைக்கும்.. அரசு திட்டம்!

மத்திய அரசின் பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், இயற்கை விவசாயம் செய்ய ஒரு ஹெக்டேருக்கு ₹31,500 மானியம் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி விவசாயிகள் இயற்கை உரம், பூச்சிக்கொல்லிகள், மண்புழு உரம் போன்றவற்றை வாங்கிக் கொள்ளலாம். அத்துடன் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சியும் வழங்கப்படுகிறது. இதில் இணைய விவசாயியிடம் 1 – 5 ஏக்கர் நிலம் இருக்கவேண்டும். அப்ளை பண்ண <


