News December 29, 2024
நெய் கொலஸ்ட்ராலை கரைக்குமா?

உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் என்றெண்ணி பலர் தங்களது உணவில் நெய்யை அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், நெய்யானது கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். எப்படியெனில் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, LDL கொலஸ்ட்ராலை கரைத்து குறைத்துவிடும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். அத்துடன் நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்னையில் இருந்து விடுபடலாம் என்கின்றனர்.
Similar News
News July 10, 2025
ஜூலை 10… வரலாற்றில் இன்று!

*1806 – வேலூர் சிப்பாய் எழுச்சி – வேலூர் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் பல ஆங்கிலேயப் படையினர் கொல்லப்பட்டனர். *1949 – கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பிறந்தநாள் *1973 – வங்கதேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் *2006 – இந்தியாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்சாட்-4 செயற்கைக்கோளை ஏற்றிச்சென்ற ஜி.எஸ்.எல்.வி. விண்கலம் இயந்திரக் கோளாறினால் கடலில் வீழ்ந்தது.
News July 10, 2025
எலான் மஸ்க் நிறுவனத்துக்கு இந்தியா அனுமதி..!

இந்தியாவில் அதிவேக இணைய சேவை வழங்கும் வகையில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு 5 ஆண்டுகள் அனுமதியை IN-SPACE மையம் வழங்கி உள்ளது. இதன் மூலம் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் 4408 முதல் தலைமுறை செயற்கை கோள்கள் இந்திய வான் எல்லை பகுதியில் செயல்பட தொடங்கும் என்றும், இதனால் 600 Gbps வேகத்தில் இணைய சேவை பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 10, 2025
நெல்சன் மண்டேலா பொன்மொழிகள்

*என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் நான் எழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள். *மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று சமுதாயத்தை மாற்றுவது அல்ல – உங்களை நீங்களே மாற்றிக் கொள்வது. *பின்னால் இருந்து வழிநடத்துங்கள் – மற்றவர்கள் தாங்கள் முன்னால் இருப்பதாக நம்பட்டும்.*இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி.