News May 7, 2024
இரவில் உடற்பயிற்சி செய்தால் தூக்கம் பாதிக்குமா?

பணிச்சூழல் காரணமாக திரைப்பட நட்சத்திரங்கள் போன்றோர், ஜிம்மில் இரவில் உடற்பயிற்சி செய்யும் நிலை உள்ளது. அப்படி செய்தால் தூக்கம் பாதிக்குமா என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. ஆனால், பிரபல மருத்துவ இணையதள கட்டுரையில், இரவில் உடற்பயிற்சி செய்தால், உடல் சோர்வடைந்து நல்ல ஆழ்ந்த தூக்கம் வருமென்று கூறப்பட்டுள்ளது. தூங்கச் செல்ல 90 நிமிடத்துக்கு முன்பு, உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 4, 2025
உக்ரைன் அதிபருடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: புடின்

ரஷ்ய தலைநகரான மாஸ்கோவிற்கு வந்தால், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என புடின் தெரிவித்துள்ளார். இருள் நிறைந்த இடத்தில் ஒரு வெளிச்சம் இருப்பதாக நினைப்பதாகவும், உக்ரைன் விவகாரத்தில் அமைதி எட்டப்படாவிட்டால், அதை ராணுவ ரீதியாக தீர்க்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதுவரை ஜெலன்ஸ்கி உடனான நேரடி சந்திப்பை புடின் புறக்கணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
News September 4, 2025
டிராக்டர், டயர்களுக்கு இனி வரி 5% மட்டுமே

விவசாயத் துறையிலும் பல்வேறு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. டிராக்டர் டயர்கள் & பாகங்கள், டிராக்டர்கள், குறிப்பான உயிர் உரங்கள், நுண்சத்துகள், சொட்டுநீர் அமைப்பு & தெளிப்பான்கள், மண்ணை பதப்படுத்தும் வேளாண் & தோட்ட உபகரணங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்களுக்கு ஜிஎஸ்டி வரி 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
News September 4, 2025
போராடி தோல்வியை தவிர்த்த இந்திய அணி

ஆசிய கோப்பை ஹாக்கி சூப்பர் 4 சுற்றில் தென் கொரியாவிடம் இந்தியா போராடி தோல்வியை தவிர்த்தது. பிஹாரில் நடந்த போட்டியில் ஹர்திக் சிங் 8வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். அதன் பிறகு தென் கொரியா இரண்டு கோல் அடித்து இந்தியாவை பின்னுக்கு தள்ளியது. பல வாய்ப்புகளை தவற விட்ட இந்தியா ஒரு வழியாக 52வது நிமிடத்தில் கோல் அடிக்க போட்டி 2-2 என்ற கணக்கில் சமன் ஆனது. இந்தியா நாளை மலேசியாவை எதிர்கொள்கிறது.