News October 15, 2025
எல்லாருக்கும் BP-யா? சபாநாயகர் அப்பாவு கிண்டல்!

சட்டப்பேரவைக்கு கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்த அதிமுக MLA-க்களை பார்த்து, அனைவருக்கும் ஒன்றாக BP அதிகமாகி விட்டதோ என்று நினைத்து விட்டதாக சபாநாயகர் அப்பாவு கிண்டலடித்தார். சிறையில் சிறைவாசிகள் அடையாள பட்டை அணிந்திருப்பது போல் உள்ளதாக அமைச்சர் ரகுபதியும் கூறிய நிலையில், சபாநாயகர் மற்றும் அமைச்சரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
Similar News
News October 15, 2025
பிரபல நடிகர் காலமானார்

பாலிவுட்டின் பிரபல நடிகர் ‘ராமாயண புகழ்’ பங்கஜ் தீர் (68) காலமானார். கேன்சரால் பாதிக்கப்பட்டு போராடிவந்த நிலையில், அவரின் உயிர் பிரிந்துள்ளது. தூர்தர்ஷன் மூலம் நாடு முழுவதும் பிரபலமான ‘மகாபாரத்’ டிவி சீரியலில், கர்ணன் வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தீரஜ். பல பாலிவுட் படங்களிலும், சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். இவரின் மறைவுக்கு திரையுலகமும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News October 15, 2025
செருப்பு மட்டுமல்ல, பாட்டிலும் வீசப்பட்டது: அமைச்சர்

கரூர் தவெக கூட்டத்தில் ரவுடிகள் புகுந்ததாக கூறப்படுவது குறித்து நயினார் நாகேந்திரன் பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஸ்டாலின், செருப்பு வீச்சை யாரும் திட்டமிட்டு செய்யவில்லை என்றார். இதனையடுத்து பேசிய அமைச்சர் சிவசங்கர், கீழே விழுந்த ஒருவருக்கு உதவுவதற்காகவே செருப்பு வீசப்பட்டதாக கூறினார். அத்துடன் பாட்டில், தேங்காயும் வீசப்பட்டதாகவும் தெரிவித்தார்.
News October 15, 2025
சற்றுமுன்: இபிஎஸ் அணியில் இணைந்த செங்கோட்டையன்

ஒருங்கிணைப்பு விவகாரத்தில், EPS மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் மீண்டும் அவரது அணியில் இணைந்துள்ளார். பேரவையில், EPS-ன் உத்தரவின்பேரில், கரூர் துயரத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ADMK MLA-க்கள் கருப்பு பட்டையுடன் வந்திருந்தனர். Ex அமைச்சர் செங்கோட்டையனும் கையில் கருப்பு பட்டையுடன்(OPS அணியவில்லை) வந்திருந்தார். அத்துடன், அவர் Ex அமைச்சர்கள் சிலரிடம் மரியாதை நிமித்தமாக பேசியுள்ளார்.