News March 30, 2024
எடப்பாடிக்கு தைரியம் இருக்கிறதா?

மோடியா லேடியா என ஜெயலலிதா கேட்டது போல், மோடியா எடப்பாடியா எனக் கேட்கும் தைரியம் இபிஎஸ்-க்கு உள்ளதா என பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் சவால் விடுத்துள்ளார். மேலும், ஜெயலலிதாவைப் போல தனித்து தேர்தலை சந்திக்கும் துணிச்சல் இபிஎஸ்-க்கு உள்ளதா? என கேள்வி எழுப்பிய அவர், தேர்தலுக்குப் பின் அதிமுக என்ற கட்சி இருக்கவே இருக்காது என கடுமையாகத் தாக்கி பேசியுள்ளார்.
Similar News
News March 20, 2026
கடலூர் மாவட்டத்திற்கு பொது பார்வையாளர்கள் நியமனம்

கடலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை கண்காணித்திட பொதுப் பார்வையாளர்களாக திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி ஆகிய தொகுதிகளுக்கு குஹா பூனம் தபஸ் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய தொகுதிகளுக்கு ப்ரீத்தி ஜெயின், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தொகுதிகளுக்கு கார்த்திகேய தன்ஜி நியமிக்கப்பட்டுள்ளனர்.

சட்டம் ஒழுங்கில் ஏன் மெத்தனம்?

விளாத்திகுளம் மாணவி ரேப் மற்றும் கொலை வழக்கில், சந்தேக நபரை கைது செய்யவே 1 வாரத்துக்கு மேல் ஆகியுள்ளது. இந்த மாணவியின் மரணமாகட்டும், கஸ்டடியில் உயிரிழந்த ஆகாஷ் வழக்காகட்டும், ஏன் அஜித்குமார் மரண வழக்கில் கூட பாதிக்கப்பட்டவர்களும், மற்றவர்களும் போராடிய பின்னரே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சாமானிய மக்கள் என்றால் மெத்தனமாக தான் அதிகாரிகள் செயல்படுவார்களா என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.