News April 21, 2025
சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல வாய்ப்பிருக்கா?

சிஎஸ்கே அணியின் மோசமான சீசன்களில் ஒன்றாக இந்த சீசன் மாறி இருக்கிறது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணிக்கு, மீண்டும் தோனி தலைமையேற்ற பிறகும் தடுமாற்றமே நீடிக்கிறது. லீக் சுற்றில் எஞ்சி இருக்கும் 6 போட்டிகளையும் வென்றால் மட்டுமே சிஎஸ்கே அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும். அதற்கு வாய்ப்பிருக்கா?
Similar News
News December 14, 2025
பாஜகவுக்கு வாழ்த்து கூறிய சசி தரூர்

கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்.,கின் வெற்றி உண்மையிலேயே பாராட்டக்கூடிய ஒன்று என சசி தரூர் கூறியுள்ளார். அதேநேரம், திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி பெற்றதற்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னதாக, முன்னதாக, ராகுல் காந்தி தலைமையிலான காங்., எம்பிகள் கூட்டத்தை <<18549139>>சசி தரூர்<<>> புறக்கணித்தது பேசுபொருளானது. அத்துடன், அவர் PM மோடியை அவ்வப்போது புகழ்வது கவனிக்கத்தக்கது.
News December 14, 2025
U-19 ஆசிய கோப்பை: இன்று Ind Vs Pak

துபாயில் நடைபெறும் U-19 ஆசிய கோப்பை தொடரில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தனது முதல் போட்டியில் UAE-ஐ 234 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, இந்த போட்டியிலும் தனது ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில் பாகிஸ்தான் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. சமபலம் கொண்ட இரு அணிகள் மோதுவதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 14, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 549 ▶குறள்: குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
▶பொருள்: குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்.


