News August 10, 2024

மருத்துவர்களும் அவர்களின் நிபுணத்துவமும்

image

➢இருதய நோய் நிபுணர் – கார்டியோலோஜிஸ்ட்
➢தோல் நோய் நிபுணர் – டெர்மடோலோஜிஸ்ட்
➢எலும்புநோய் நிபுணர் – ஆர்த்தோபீடிக்
➢குழந்தைகள் நிபுணர் – பீடியாட்ரிஸியன்
➢கண்நோய் நிபுணர் – ஆப்தல்மொலோஜிஸ்ட்
➢பல் நிபுணர் – டென்டிஸ்ட்
➢சிறுநீரக நிபுணர் – நேபிரோலொஜிஸ்ட்
➢புற்றுநோய் நிபுணர் – ஆன்கோலோஜிஸ்ட்
➢அறுவை சிகிச்சை நிபுணர் – சர்ஜியன்
➢நுரையீரல் நிபுணர் – பல்மோனோலோஜிஸ்ட்

Similar News

News January 13, 2026

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்

image

*அறியாமையை விட ஆபத்தான ஒரே விஷயம் ஆணவம். *பலவீனமானவர்கள் பழிவாங்குகிறார்கள். வலிமையானவர்கள் மன்னிக்கிறார்கள். புத்திசாலிகள் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள். *அறிவை விட கற்பனை முக்கியமானது. அறிவுக்கு எல்லை உண்டு. கற்பனை உலகைச் சுற்றி வருகிறது. *எதையாவது நீங்கள் நம்புவதால் மட்டுமே, அது உண்மை என்று அர்த்தமாகாது. *3 பெரிய சக்திகள் உலகை ஆளுகின்றன: முட்டாள்தனம், பயம் மற்றும் பேராசை.

News January 13, 2026

இந்தியர்களுக்கு ஜெர்மனி சிறப்பு அறிவிப்பு

image

ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் பொருளாதாரம், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மேலும், இந்தியர்களுக்கு Visa-Free Transit வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜெர்மனி விமான நிலையங்கள் வழியாக வேறொரு நாட்டிற்குச் செல்லும் இந்தியப் பயணிகள் இனி தனி போக்குவரத்து விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை.

News January 13, 2026

T20WC: வங்கதேச போட்டிகள் மாற்றமா?

image

டி20 உலகக்கோப்பையில் வங்கதேசம் விளையாடும் போட்டிகளை மாற்றுவது குறித்து ICC எந்த ஒரு அறிவுறுத்தல்களையும் வழங்கவில்லை என BCCI தெரிவித்துள்ளது. இது BCB – ICC இடையிலான விவகாரம் என்றும், ICC மாற்ற சொன்னால் பரிசீலிப்போம் என்றும் கூறியுள்ளது. முன்னதாக, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணங்களால் கொல்கத்தாவில் நடக்க இருந்த போட்டிகள் சென்னை, திருவனந்தபுரத்திற்கு மாற்ற ICC முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

error: Content is protected !!