News September 14, 2024
சிதம்பரத்தில் மாணவியை ஆபாசமாக சித்தரித்த மருத்துவர் கைது

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் சதீஷ், சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர் இவர். அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவியை காதலிப்பதாக வீடியோ காலில் பேசி அந்த மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மாணவி சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் மகளிர் காவல் ஆய்வாளர் அமுதா வழக்கு பதிவு செய்து சதீஷை கைது செய்தனர்.
Similar News
News November 19, 2025
கடலூர்: மீண்டும் மழை எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 19, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(நவ.18) இரவு 10 மணி முதல் இன்று(நவ.19) காலை 6 மணி வரை கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாதோப்பு, ஆகிய உட்கோட்டங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
புனித பயணம் மேற்கொண்டவர்களுக்கு மானியம்

ஜெருசேலம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்துவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 பேருக்கு நேரடியாக மானியம் வழங்குவதற்கு புர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 28.2.2025-க்குள் <


