News March 28, 2025
டெய்லி மேட்ச் பாக்குறீங்களா? கொஞ்சம் உஷார்!

IPL ஜுரம் ரசிகர்களைத் தொற்றிக் கொண்டு விட்டது. டெய்லி மேட்ச் பார்ப்பதை வழக்கமாக கொள்ளும் பலர், ஒரு மேட்சின் முடிவை, ரொம்ப சீரியஸாகவும் எடுத்துக் கொள்கின்றனர். அது மூளையில் மகிழ்ச்சி, மன அழுத்த ஹார்மோன்களில் ஏற்ற இறக்கங்களை உண்டாக்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். தங்களின் டீம் தோற்றுவிட்டால், பலரும் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர். இந்த வெற்றி தோல்விகள் தற்காலிகமானது தான் என்பதை உணருங்கள்.
Similar News
News October 18, 2025
ATM கார்டு தொலஞ்சிடுச்சா? உடனே இதை செஞ்சிடுங்க!

➤வங்கியை தொடர்பு கொண்டு ATM கார்டை Block செய்ய சொல்லுங்கள் ➤வங்கியின் இணையதளத்துக்கு சென்று ஆன்லைனிலேயே கார்டை Block செய்ய முடியும் ➤உங்கள் பணம் திருடு போகாமல் இருக்க, உடனே போலீசில் புகாரளியுங்கள் ➤புதிய கார்டுக்கு வங்கியில் விண்ணப்பியுங்கள் ➤Automatic payments-ஐ OFF செய்து வையுங்கள் ➤உங்களுக்கு தெரியாமல் பணம் திருடப்படுகிறதா என்பதை அறிய Transaction History-ஐ அடிக்கடி கண்காணிக்கவும். SHARE.
News October 18, 2025
PAK-ன் காட்டுமிராண்டித்தனம்: ரஷீத் கான்

PAK தாக்குதலில் ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் பலியான சம்பவத்தை ரஷீத் கான் கண்டித்துள்ளார். மக்கள் வசிக்கும் பகுதியை தாக்குவது காட்டுமிராண்டித்தனமான செயல் என கூறிய அவர், கிரிக்கெட்டில் ஜொலிக்க எண்ணிய 3 வீரர்களின் உயிரை பாகிஸ்தான் பறித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், Tri-nation series-ல் இருந்து விலகுவதாக ஆப்கன் கிரிக்கெட் வாரியம் எடுத்த முடிவுக்கு அவர் ஆதரவளித்துள்ளார்.
News October 18, 2025
தனியார் பல்கலை சட்ட திருத்தத்திற்கு TTV எதிர்ப்பு

அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலை.,களாக மாற்றும் சட்ட திருத்தத்தை அரசு திரும்ப பெற டிடிவி வலியுறுத்தியுள்ளார். இச்சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவிக் கட்டணம், இலவசக் கல்வி, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தப்படும். அதோடு, கல்விக் கட்டணமும் பன்மடங்கு உயர வாய்ப்புள்ளது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.