News February 24, 2025
தோல் பளபளனு ஆகணுமா? இதை பண்ணுங்க

*நிறைய தண்ணீர் குடியுங்கள் (தோலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது) *நிறைய காய்கறிகள் & பழங்கள் சாப்பிடுங்கள் (அதிலிருக்கும் antioxidant தோலின் செல்களை வளரச் செய்கிறது) *சர்க்கரையை குறையுங்கள் (அதிக சர்க்கரை வயதான தோற்றத்தை தரும்) *மீன் எண்ணெய் (Omega-3) சாப்பிடுங்கள் (தோலுக்கு ஊட்டமளிக்கும்) *வைட்டமின் C மற்றும் வைட்டமின் E அதிகம் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
Similar News
News February 25, 2025
தோல்வி எதிரொலி: பயிற்சியாளரை நீக்க PCB முடிவு

CT தொடரில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக பாகிஸ்தான் அணியின் இடைக்கால பயிற்சியாளர் ஆகிப் ஜாவித்தை நீக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு (PCB) செய்துள்ளது. CT தொடரில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணியிடம் PAK தோல்வி அடைந்ததால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது. இதனால் அதிருப்தியான PCB, இடைக்கால தலைமை பயிற்சியாளர் மற்றும் துணை பயிற்சியாளரை விடுவிக்க முடிவு செய்துள்ளது.
News February 25, 2025
இன்றைய (பிப். 25) நல்ல நேரம்

▶பிப்ரவரி- 25 ▶மாசி – 13 ▶கிழமை: செவ்வாய்
▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 04:30 PM – 05:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 07:30 PM – 08:30 PM
▶ராகு காலம்: 03:00 PM- 04:30 PM
▶எமகண்டம்: 09:00 AM – 10:30 AM
▶குளிகை: 12:00 PM- 01:30 PM
▶திதி: திரயோதசி ▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: திருவாதிரை
▶நட்சத்திரம் : உத்திராடம் மா 5.11
News February 25, 2025
தினமும் மோடியின் டிபன் என்ன தெரியுமா?

ஆண்டுக்கு 300 நாள்கள் டிபனுக்கு மக்கானாவைதான் சாப்பிடுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்கானா என்பது அல்லி மலரின் விதைகள் ஆகும். வட இந்திய மக்கள் இதனை அதிகளவில் சாப்பிடுகின்றனர். ஊட்டச்சத்து மிக்க இந்த உணவின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பட்ஜெட்டில் மக்கானா வாரியம் அமைப்பது குறித்து அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தினமும் காலையில் அதைதான் உட்கொள்வதாக மோடியே தற்போது பேசியிருக்கிறார்.