News August 7, 2025
உங்க சம்பளத்தில் பாதியை சேமிக்க வேண்டுமா?

கையில் காசே நிற்பதில்லையா? இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.
✦காட்சிப்படுத்துதல் மூலம், சூப்பர் மார்க்கெட்டில் தேவையில்லாத பொருள்கள் வாங்குவதை தவிர்க்கவும்.
✦சேமிப்பு போகத்தான், செலவு என்ற மன நிலைக்கு வாருங்கள்.
✦சோஷியல் மீடியாக்களை பார்த்து மயங்கி ஆடைகள், உணவுகள் உள்ளிட்டவற்றிற்கு பணத்தை செலவழிக்க வேண்டாம். ✦UPI-யை தவிர்த்து ஒரு பொருளை வாங்கும் போதும் கையில் பணம் வைத்து கொள்ளுங்கள்.
Similar News
News March 8, 2026
₹1 செலவில்லை.. இலவச மருத்துவ ஆலோசனை!

பல இடங்களில் மருந்துச் செலவை விட, டாக்டரின் Consultation Fees மிக அதிகமாக உள்ளது. இது ஏழை எளிய மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. இதனை தவிர்க்க, மத்திய அரசு இ-சஞ்சீவனி என்ற திட்டத்தை வழங்குகிறது. இணையதளம் மூலம் தொலைபேசி / வீடியோ கால் மூலம் நோய்கள் & சிகிச்சைகள் பற்றி டாக்டரிடம் ஆலோசனை பெறலாம். இதில் வழங்கப்படும் இ-பிரிஸ்கிரிப்ஷனை வைத்து மருந்துகளும் வாங்கலாம். இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 8, 2026
காய்கறிகள் விலை பாதியாக குறைந்தது!

வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாள்களாக கிலோ ₹10-க்கு விற்பனையான தக்காளி அதிலும் பாதியாக குறைந்து இன்று 1 கிலோ ₹5-க்கு விற்பனையாகிறது. அதேபோல், 1 கிலோ வெங்காயம் ₹18, கேரட் ₹20, கத்திரிக்காய் ₹15, முருங்கைக்காய் ₹50 என காய்கறிகள் விலை கணிசமாக குறைந்துள்ளது. இந்த விலை சரிவு விவசாயிகளுக்கு வேதனையை கொடுத்துள்ளது.
News March 8, 2026
எழுதாத பேனாவுக்கு சிலை எதற்கு? EPS

எழுதாத பேனாவுக்கு கடலில் ₹82 கோடியில் சிலை வைக்க முயற்சிக்கின்றனர். எழுதாத பேனாவுக்கு சிலை எதற்கு என EPS கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல, கார் பந்தயத்துக்கு ₹100 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக கூறிய அவர், மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக இந்த அரசு செலவிட்டுள்ளது எனவும் விமர்சித்துள்ளார். மேலும், திமுக அரசை அகற்றுவதுதான் மக்களின் கனவு எனவும் பேசியுள்ளார்.


