News April 4, 2025
ஒரு நாள் முழுவதும் செம எனர்ஜியா இருக்கணுமா?

ஒரு நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட கீழ்காணும் உணவுகளை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், இயற்கை சர்க்கரை, கார்போஹைட்ரேட் உடனடி ஆற்றலை கொடுக்கிறது. பாதாமில் உள்ள மெக்னீசியமும் புரதமும் எனர்ஜி பூஸ்டர் என அழைக்கப்படுகிறது. முட்டையில் உள்ள புரதம் தசைகளை வலுப்படுத்தும். பேரீச்சம்பழத்தில் உள்ள நார்ச்சத்து, இரும்புச்சத்து உடனடி ஆற்றலைத்தரும்.
Similar News
News December 1, 2025
நாமக்கல்: முட்டை விலையில் மாற்றம் இல்லை

நாமக்கல்லில் இன்று (டிசம்பர் 1) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.6.10 என நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் தீவனச் செலவு, மழை, குளிர் ஆகியவை காரணமாக தேவை அதிகரித்ததால் விலை உயர்ந்தது. இந்த விலை கடந்த ஒரு வாரமாக நிலைத்து உள்ளது.
News December 1, 2025
ஷேக் ஹசீனாவுக்கு அடிமேல் அடி!

வங்கதேச EX., PM <<18408820>>ஷேக் ஹசீனாவுக்கு<<>>, சமீபத்தில் மாணவர்கள் போராட்ட வழக்கில் மரண தண்டனையும், அரசு நில ஒதுக்கீடு ஊழல் வழக்கில் 21 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த அடியாக அதே ஊழல் தொடர்பான மற்றொரு வழக்கில், டாக்கா நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. ஷேக் ஹசீனாவின் மருமகளும், பிரிட்டிஷ் MP-யுமான துலிப் சித்திக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
News December 1, 2025
எலும்புகளை வலிமையாக்க இத சாப்பிடுங்க!

நம் உடலின் அஸ்திவாரமாக விளங்கும் எலும்புகளை வலுவாக்குவது மிக அவசியம். எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஒரு உணவு முருங்கைக்காய். இதில், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் உள்ளதால் எலும்பை வலிமையாக்கும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, அதன் ஆரோக்கியம் கூடும். முக்கியமாக குழந்தைகளின் எலும்புக்கு இது மிகவும் நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.


