News April 1, 2025
ஹேப்பியா இருக்கணுமா? 10 நிமிடம் ஓடுங்க!

தினமும் 10 நிமிடம் ஓடுவதன் மூலம் மகிழ்ச்சியான மனநிலை ஏற்படும் என்கின்றனர் ஜப்பானிய ஆய்வாளர்கள். ஓடுவதால் பெருமூளை தமனியில் ரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரித்து, மூளையின் செயல்பாடு அதிகரிக்கிறது. இதனால் மூலையில் ஆக்சிஜன் அளவு அதிகரிப்பதுடன், மூளையின் முன்புரணியை தூண்டுவதன் மூலமாக மூளை சிறப்பாக செயல்பட்டு மகிழ்ச்சி ஏற்படும் என்றும் அவர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஓடத் தயாரா?
Similar News
News April 2, 2025
சட்டமன்றத்தில் ஸ்டாலின் vs இபிஎஸ்.. வார்த்தை போர்

கச்சத்தீவு குறித்து முதல்வர் மற்றும் இபிஎஸ் இடையே சட்டமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. வாஜ்பாய் அரசில் அங்கம் வகித்த போது ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை என இபிஎஸ் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் நீங்கள் 10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பினார். இப்போது கூட டெல்லி சென்றீர்களே, கச்சத்தீவு குறித்து வலியுறுத்தினீர்களா? எனவும் வினவினார்.
News April 2, 2025
திமுக ஒரு நச்சுப் பாம்பு : ஆ.ராசாவுக்கு எச்.ராஜா பதிலடி

திமுக வேட்டிய கட்டும் போது பொட்டு வைக்காதீங்க என்று ஆ.ராசா பேசியது சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து எச்.ராஜா, திமுக ஒரு இந்து விரோத நச்சுப் பாம்பு. திமுக கரை வேட்டி கட்டுபவர்கள் பொட்டு வைக்க வேண்டாம். கையில் கயிறு கட்ட வேண்டாம் என்று திமுகவில் உள்ள இந்துக்களிடம் சொல்லும் ஆ.ராசா, திமுகவில் இருக்கும் இஸ்லாமியர்களிடம் தொப்பி அணியாதீர்கள்; தாடி வைக்காதீர்கள் என்று சொல்வாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
News April 2, 2025
ஹாலிவுட் ‘பேட் பாய்’ நடிகர் காலமானார்

டாப் கன், பேட்மேன் ஃபாரவர், தி டோர்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் வால் கில்மெர்(65) காலமானார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பிறந்து வளர்ந்த அவர், ஹாலிவுட் பேட் பாய் என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார். நிமோனியாவில் பாதிக்கப்பட்ட கில்மெர், உயிரிழந்துவிட்டதாக அவரது மகள் மெர்சிடெஸ் தெரிவித்துள்ளதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.