News March 24, 2025
அக்னிவீரராக வேண்டுமா? அப்போ உடனே இத பண்ணுங்க

அக்னிவீரர் ஆள்சேர்ப்பு குறித்து கோவை ராணுவ அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அக்னிவீரர் ஆட்சேர்ப்புக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் www.joinindianarmy.nic.in-ல் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஏப்ரல் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Similar News
News October 23, 2025
BREAKING: இந்தியா பேட்டிங்

அடிலெய்டில் நடக்கும் 2-வது ODI-ல் டாஸ் வென்று ஆஸி. அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. முதல் ODI-ல் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்குமா இந்திய அணி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணி: கில்(C), ரோஹித், கோலி, ஷ்ரேயஸ் ஐயர், KL ராகுல், அக்சர் படேல், சுந்தர், நிதிஷ் ரெட்டி, ராணா, அர்ஷ்தீப் சிங், சிராஜ். இன்று வெற்றி பெறுமா இந்தியா?
News October 23, 2025
BREAKING: திமுக MLA பொன்னுசாமி காலமானார்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி திமுக MLA பொன்னுசாமி(74) மாரடைப்பால் காலமானார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட இவர் பழங்குடி மக்களின் முகமாக அறியப்பட்டவர். முன்னர் அதிமுகவில் இருந்த இவர், தற்போது திமுகவில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த நிலையில், மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #RIP
News October 23, 2025
ஆசியான் மாநாடு: PM மோடி பங்கேற்கமாட்டார் என தகவல்

அக்.26-ம் தேதி மலேசியாவில் தொடங்கும் ஆசியான் உச்சி மாநாட்டில் PM மோடி பங்கேற்க வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. ஆசியான் மாநாட்டில், PM மோடி அதிபர் டிரம்பை சந்தித்து பேசுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், PM மோடி காணொலி மூலம் மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.