News December 7, 2024
PVC ஆதார் கார்டு வேணுமா.. ரொம்ப ரொம்ப ஈஸி

காகித ஆதார் அட்டையை ஏடிஎம் கார்டு போல பிளாஸ்டிக்கில் இருக்கும் கார்டாக ஈஸியாக மாற்றலாம். ப்ளே ஸ்டாரில் M AADHAAR என்ற ஆப்-ஐ டவுன்லோடு செய்யுங்கள். அதில், உங்கள் ஆதார் போன் நம்பரை டைப் செய்தால் ஒரு OTP வரும். அந்த OTP-ஐ கொடுத்து உள்ளே போனால், ORDER PVC CARD என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் சென்று ஆதார் எண்ணை டைப் செய்து, ரூ.50-ஐ செலுத்தினால் ஒரு வாரத்தில் PVC ஆதார் கார்டு வீட்டுக்கே வந்துவிடும்.
Similar News
News April 7, 2026
உளுந்தூர்பேட்டை வந்தார் உதயநிதி ஸ்டாலின்!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வசந்த வேலை ஆதரித்து தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை செய்ய உளுந்தூர்பேட்டைக்கு வருகை தந்த நிலையில், அவரை கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
News April 7, 2026
சுங்கச்சாவடிகளில் இனி No Cash.. அரசு அதிர்ச்சி அறிவிப்பு

சுங்கச்சாவடிகளில் இனி ரொக்கம் செலுத்தும் முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் 10-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது. அன்று முதல் FASTag, UPI முறைகளில் மட்டுமே பணப் பரிவர்த்தனை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. FASTag இல்லையெனில் சுங்கச்சாவடியை கடக்க UPI மூலம் பணம் செலுத்தலாம். ஆனால், வழக்கமான கட்டணத்தை விட 1.25 மடங்கு கூடுதலாக செலுத்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. ALERT
News April 7, 2026
காலில் விழுவது தமிழர் மரபு: EPS

EPS காலை தேடினார் என உதயநிதி விமர்சித்திருந்தார். இந்நிலையில், காலில் விழுந்து ஆசி பெறுவது தமிழர் மரபு என EPS விளக்கமளித்துள்ளார். திருமணம் முடிந்த தம்பதி பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுவது போல்தான், ஒரு உயர் பொறுப்பு கொடுக்கப்பட்டபோது காலில் விழுந்ததாக கூறிய அவர், உதயநிதி ஆணவமாக பேசி, தரையில் நடக்காமல் தலைக்கணத்துடன் நடப்பதாகவும் விமர்சித்தார்.


