News September 10, 2025
மாதம் ₹5,550 வேண்டுமா? உடனே இதை பண்ணுங்க

போஸ்ட் ஆபிஸில் MIS (மாதாந்திர முதலீட்டு திட்டம்) மூலம் மாதம் ₹5,550 வரை பெறலாம். இந்த திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் மாதம் ₹1,000 முதல் டெபாசிட் செய்யலாம். 5 ஆண்டுகளில் அதிகபட்சம் ₹9 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். அதன்பின், மாதம் ₹5,550 வட்டி உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். இது தனிநபர் MIS விவரம். இதேபோல், கூட்டு MIS கணக்கும் உள்ளது. விவரத்தை அருகிலுள்ள போஸ்ட் ஆபிஸில் அறியலாம். SHARE IT
Similar News
News September 11, 2025
பள்ளிக்கு விடுமுறை அளித்தது தவறு: அன்பில் மகேஸ்

திருச்சியில் ஒரு பள்ளிக்கு விடுமுறை அளித்து, அங்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடத்தியதற்கு <<17667160>>அண்ணாமலை கண்டனம்<<>> தெரிவித்திருந்தார். இந்நிலையில், CEO-விடம் கேட்காமல் மாவட்ட கல்வி அதிகாரி பள்ளிக்கு விடுமுறை அளித்துவிட்டதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். முகாம் நடத்துவதற்காக பள்ளிக்கு விடுமுறை அளிப்பது தவறு என தெரிவித்த அவர், இதுபோல் இனி நடக்காது என உறுதியளித்துள்ளார்.
News September 11, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 11, 2025
ஏழைகளுக்கு எதிராக நிற்கும் திமுக: EPS காட்டம்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஏழைகளுக்காக கொண்டுவரப்பட்ட அதிமுகவின் திட்டங்களை திமுக நிறுத்தியதாக EPS குற்றம்சாட்டினார். அதிமுக ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட கட்சி எனவும், அதன் தலைவர்கள் மக்களுக்கு என்ன தேவை என்பதை சிந்தித்தவர்கள் என்றும் EPS கூறியுள்ளார். தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, தமிழ்நாடு வளர்ச்சியடைந்தது போல பொய் செய்திகளை மட்டுமே திமுக பரப்பி வருவதாகவும் விமர்சித்தார்.