News February 24, 2025
காலை அலாரம் அடித்த பிறகு தான் எழுந்திருக்கிறீர்களா?

தினமும் காலையில் அலாரம் அடித்த பிறகு தான், கண்விழித்து வேக வேகமாக கிளம்புவோம். ஆனால், அந்த காலை அலாரம் இதயப்பிரச்னை இருப்பவர்களுக்கு ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. திடீரென சத்தம் கேட்டு எழுந்தால், Blood Pressure சட்டென அதிகரிக்குமாம். இது Cardiovascular அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தி இதய பிரச்னைகள் அதிகரிக்கும் என எச்சரிக்கிறார்கள். இதற்கு Morning Blood Pressure Surge எனப் பெயர்.
Similar News
News February 24, 2025
வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா வளர்த்த மாணவர்கள்

கோவையில் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டின் மொட்டை மாடியில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா வளர்த்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் கேரளாவைச் சேர்ந்த 4 பேர் மற்றும் அரியலூரைச் சேர்ந்த ஒருவர் என 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில், மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக அதிமுக, பாஜக குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News February 24, 2025
வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தைகள் சரிவு

வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் வீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. காலை 10 மணி அளவில் சென்செக்ஸ் 753 புள்ளிகள் சரிந்தது. நிஃப்டி 233 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. இன்றைய வர்த்தகத்தில் வங்கி, ஐடி துறைகளின் பங்குகள் 2% அளவுக்கு வீழ்ச்சியுடன் வர்த்தகமாகின. இந்திய பொருட்கள் மீது டிரம்ப்பின் வரி அச்சுறுத்தல் ஆகியவை பங்குச் சந்தைகள் வீழ்ச்சிக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
News February 24, 2025
10வது போதும்! மத்திய அரசில் 21,413 காலிப்பணியிடங்கள்

தபால் அலுவலகங்களில் காலியாக இருக்கும் 21,413 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளிவந்துள்ளது. MTS Postman, Mailguard Postக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும், Postal Assistant, Sorting Assistantக்கு டிகிரி, கணினி அறிவும் வேண்டும். 18 – 32 வயதுடையோர் பிப். 1 முதல் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வின்றி மெரிட் அடிப்படையில் தேர்வு நடைபெறும். சம்பளம் ₹29,380 வரை. <