News August 12, 2025
மொபைல் பேங்கிங் யூஸ் பண்றீங்களா.. நோட் திஸ்!

70% வங்கிகளின் Mobile banking App-களில் SSL(Secure Sockets Layer) சான்றிதழ் இல்லை என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. SSL இல்லாத App-கள் எளிதில் ஹேக் செய்யப்படும். அதே போல Phishing, Spoofing போன்ற வழிகளிலிலும் தகவல்கள் திருடப்படுகின்றன. இதிலிருந்து தப்பிக்க,
◈அங்கீகரிக்கப்படாத வலைத்தளங்கள் தவிர்க்கவும்.
◈SSL சான்றிதழ் இல்லாத App-களை தவிர்க்கவும்.
◈பொது Wifi-ல் Mobile banking-ஐ பயன்படுத்த வேண்டாம்.
Similar News
News August 12, 2025
திமுகவில் இணைந்த OPS அணி மா.செ., ஆயில் ரமேஷ்!

கரூர் மேற்கு மாவட்ட அதிமுக(OPS அணி) செயலாளர் ஆயில் ரமேஷ் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவரது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோரும் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். அதேபோல், அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் சரண்ராஜ், கவின், சிவபாலன் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்தனர். ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் மாற்றுக் கட்சியினர் பலரையும் செந்தில் பாலாஜி திமுகவில் இணைத்து வருகிறார்.
News August 12, 2025
பெண்கள் இறுக்கமாக அணிந்தால்… அலர்ட்

பெண்களின் ஃபேவரைட் உடைகளில் ஒன்றான `ஸ்கின்னி’ ஜீன்ஸ் பேன்ட் அணிவது, கருப்பைத் தொற்று உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இடுப்புப் பகுதியில் வெப்பத்தை இது அதிகரிக்கிறது. மேலும் மாதவிலக்கு பிரச்னைகள், பூஞ்சை தொற்று, சிறுநீர்பாதை தொற்று, தசைகள் – நரம்புகள் சேதமடைதல், நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பையும் இது அதிகரிக்கிறதாம்.
News August 12, 2025
3 நாள்கள் தொடர் விடுமுறை.. சிறப்பு ரயில், பஸ்கள் அறிவிப்பு

ஆக.15, 16 மற்றும் 17-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு செல்வோர் ரயில்கள், பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தெற்கு ரயில்வே <<17332494>>சிறப்பு ரயில்களை<<>> அறிவித்துள்ளது. அதேபோல், தமிழக அரசும் <<17375212>>சிறப்பு பஸ்களை<<>> அறிவித்துள்ளது. கடைசி நேர சிரமத்தை தவிர்க்கும் வகையில் பலரும் இப்போதே முன்பதிவு செய்து வருகின்றனர். நீங்க பண்ணிட்டீங்களா?