News October 25, 2025

கூகிள் Chrome யூஸ் பண்றீங்களா.. அய்யய்யோ! உஷாரா இருங்க

image

Chrome பிரவுசரில் முக்கிய செக்யூரிட்டி குறைபாடு ஒன்று கண்டறியப்பட்டு உள்ளதாகவும், இதனால் கணினியை எளிதில் ஹேக் செய்து தகவல்களை திருடி விடலாம் என்றும் CERT-In எச்சரித்துள்ளது. Chrome & macOS-ல் 41.0.7390.122/.123 பயன்படுத்துவோரும், Linux-ல் 141.0.7390.122 வெர்ஷனை பயன்படுத்துவோரும் உடனடியாக அவற்றை அப்டேட் செய்யும் படியும் கேட்டுக் கொண்டுள்ளது. இதனை அனைத்து நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 25, 2025

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறியது இவர்தான்!

image

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்ஸ்டா பிரபலம் ஆதிரை நடையை கட்டியுள்ளார். இந்த வார எவிக்‌ஷனில் ஆதிரை, அரோரா, துஷார், ரம்யா, கலையரசன், பிரவீன் ராஜ், வியானா நாமினேட் ஆகியிருந்தனர். இந்நிலையில் குறைவான வாக்குகளை பெற்றதால் ஆதிரை எலிமினேட் செய்யப்படுவதாக விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். முன்னதாக சுபிக்‌ஷா நாமினேஷன் ஃப்ரீ பாஸ் வென்று, எவிக்‌ஷனில் இருந்து தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

News October 25, 2025

ஐஸ்லாந்தில் முதல்முறையாக கொசுக்கள்

image

குளிர் பிரதேசமான ஐஸ்லாந்து நாட்டில், முதல் முறையாக சொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 3 கொசுக்கள் பிடிக்கப்பட்டன. இந்த கொசுக்கள், நோய்களை பரப்பாத வகை என்றாலும், இது காலநிலை மாற்றத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. ஐஸ்லாந்தின் பனியுலகில் இது ஒரு புதிய அத்தியாயமாகும். கொசுக்களுக்கு வெப்பநிலை பொதுவாக ~10°C க்கு மேல் தேவை என்பதால், அங்கு கொசுக்கள் இல்லாமல் இருந்து வந்தது.

News October 25, 2025

டார்ச் இருக்கும்போது Lantern எதற்கு? மோடி

image

பிஹாரில் தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. அங்கு தேர்தல் பரப்புரை மேற்கொண்ட PM மோடி, பொதுமக்களை மொபைலில் டார்ச்சை எரியச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அவர்களும் டார்ச்சை ஆன் செய்ய, ‘இவ்வளவு வெளிச்சம் இருக்கும்போது எதற்கு Lantern விளக்குகள்?’ என்று கேட்டார். RJD-யின் சின்னம் Lantern விளக்குகள் என்பதையே மோடி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசியல் கட்சி சின்னங்களுக்கு ஒரு பன்ச் சொல்லுங்களேன்.

error: Content is protected !!