News July 6, 2025

புளூடூத் யூஸ் பண்றீங்களா? எச்சரிக்கை!

image

புளூடூத் ஆடியோ சாதனங்கள் ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளதாக Indian Cyber ​​Security Agency எச்சரித்துள்ளது. புளூடூத் மூலம் ஸ்பீக்கர்கள், இயர் பட்ஸ், ஹெட்போன் உள்ளிட்ட ஆடியோ சாதனங்களை ஹேக் செய்து, உங்களின் உரையாடல்களை கண்காணிக்கவும், அழைப்புகளை ஹைஜாக் செய்யவும், கால் டேட்டா, கான்டாக்ட்ஸ் உள்ளிட்டவற்றை திருடவும் வாய்ப்புள்ளது. ஆகவே, பொது இடங்களில் புளூடூத் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

Similar News

News July 6, 2025

தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திருவிழாவையொட்டி நாளை(ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும். இதனால், மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் நாளை இயங்காது. குடமுழுக்கு விழாவையொட்டி சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், 6,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். TNSTC சிறப்பு பஸ்களையும் அறிவித்துள்ளது.

News July 6, 2025

2026-ல் திமுகவுக்கு இருக்கும் பாதகம்?

image

ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என <<16963562>>திமுகவும்<<>>, ஆட்சியை கைப்பற்ற அதிமுகவும் கங்கணம் கட்டி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக, பல்வேறு அரசின் திட்டங்கள் திமுகவுக்கு சாதகமாக இருந்தாலும், சட்டம்-ஒழுங்கு பிரச்னை பாதகமாக இருக்கிறது. அதேபோல், 2021-ல் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த மாத மாதம் மின் கணக்கீடு, பழைய ஓய்வூதிய திட்டம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்டவைகளை நிறைவேற்றாதது பாதகமாக உள்ளன.

News July 6, 2025

IBPS: 1,007 பணியிடங்கள் அறிவிப்பு

image

வங்கிகளில் காலியாக உள்ள Scale 1 அளவிலான 1,007 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை IBPS வெளியிட்டுள்ளது. பொறியியல் படித்தோரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு & நேர்காணல் அடிப்படையில் செலக்‌ஷன் நடைபெறும். சம்பளம்: ₹48,480 – ₹85,920. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 21. இதுகுறித்து மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள்.

error: Content is protected !!