News March 25, 2025
அலுமினிய பாத்திரங்களை யூஸ் பண்றீங்களா?

எத்தனை விழிப்புணர்வு கொடுத்தாலும், இன்னமும் பலர் சமையலுக்கு அலுமினிய பாத்திரங்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் நம் உணவிலும் அதிக அளவிலான அலுமினிய துகள்கள் கலக்கின்றன. இதனை உட்கொள்வதால் நமது நரம்பு மண்டலங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, கேன்சரும் வரக்கூடும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், எலும்புகள், கிட்னி, கல்லீரல் ஆகியவற்றிலும் கூட இது பாதிப்பை ஏற்படுத்துமாம். SHARE IT.
Similar News
News January 8, 2026
புன்னகை பூவாக மலரும் மிருணாள் தாகூர்!

‘சீதா ராமம்’ என்ற ஒற்றை படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மிருணாள் தாகூர் மாறினார்.
அதுமட்டுமல்ல ஒரு தமிழ் படத்தில் கூட நடித்ததில்லை என்றாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக வாழ்ந்து கொண்டிருப்பவர் மிருணாள். தனது சிரிப்பு மற்றும் கண்கள் செய்யும் மாயஜாலத்தால் அனைவரும் கவரும் அவர், இன்ஸ்டாவில் தனது லேட்டஸ்ட் போட்டோஸை பகிர்ந்துள்ளார். அதை மேலே Swipe செய்து அதை பாருங்க.
News January 8, 2026
8 போர்களை நிறுத்தியும் நோபல் பரிசு இல்லை: டிரம்ப்

அமைதிக்கான நோபல் பரிசு வழங்காததற்காக நார்வே மீது தனது கோபத்தை டிரம்ப் வெளிப்படுத்தினார். தனியாக 8 போர்களை நிறுத்திய தன்னை, NATO உறுப்பினரான நார்வே நோபல் பரிசுக்கு பரிந்துரைக்காதது முட்டாள்தனமான செயல் என சாடினார். ஆனால், நோபல் தனக்கு ஒரு பொருட்டல்ல என்றும் பல கோடி உயிர்களைக் காப்பாற்றியதே போதும் எனவும் குறிப்பிட்டார். US இல்லை என்றால் NATO மீது சீனா, ரஷ்யாவுக்கு பயம் இருக்காது எனவும் கூறினார்.
News January 8, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 574
▶குறள்:
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.
▶பொருள்: வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?


