News April 9, 2025
ஆதாரை மிஸ்யூஸ் பண்ணி இருக்காங்க என சந்தேகமா..?

ஆன்லைன் மோசடிகளில் ஆதார் தான் அதிகமாக குறிவைக்கப்படுகிறது. ஆதாரின் தகவல்கள் திருடப்பட்டதாக சந்தேகம் இருந்தால், myAadhaar போர்ட்டலில் Log in செய்து, ‘Authentication History’ஐ கிளிக் செய்யவும் *அதில், தேதி வரம்பைத் தேர்வு செய்தால், ஆதார் பயன்பாட்டு விவரங்கள் தெரிந்து கொள்ளலாம் *ஏதாவது கம்ப்ளெய்ண்ட் செய்ய வேண்டும் என்றால், உதவி எண் 1947 அல்லது help@uidai.gov.in க்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
Similar News
News January 1, 2026
உங்கள் குழந்தையிடம் இந்த பழக்கம் இல்லையா?

குழந்தைகள் அடம்பிடிக்கும்போது நீங்கள் அவர்கள் மீது கோபப்பட்டிருப்பீர்கள். இது தவறு என தெரிந்தும் மன்னிப்பு கேட்காமல் அப்படியே கடந்தும் சென்றிருப்பீர்கள். இதை கவனிக்கும் உங்கள் குழந்தையும், தவறு செய்தால் மன்னிப்பு கேட்க மறுக்கின்றனர். எனவே, உங்கள் குழந்தையிடம் நீங்கள் முதலில் மன்னிப்பு கேட்டு பழகுங்கள். இதன்மூலம் மரியாதையையும், மன்னிப்பு கேட்கும் குணத்தையும் அவர்கள் எளிதில் கற்றுக்கொள்வர். SHARE.
News January 1, 2026
குளிர்காலத்தில் இட்லி மாவு புளிக்க நேரமாகுதா?

இட்லி மாவு புளித்தால் மட்டுமே இட்லி பஞ்சு போல மென்மையாக வரும். ஆனால், குளிர் காலத்தில் இட்லி மாவு விரைவாக புளிக்காது. மாவை புளிக்க வைக்க சில டிப்ஸ் இதோ! * மாவை கைகளால் கலக்கும் போது எளிதாக புளிக்கும் *அரிசி அரைக்கும் போது அதனுடன் அவல் அல்லது வடித்த சாதத்தை சேர்த்து அரைக்கவும் *மாவு அரைக்கும் போது சிறிது சூடான நீரை பயன்படுத்தலாம் *மாவு அரைத்த பிறகு அதில் கால் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்க்கலாம்.
News January 1, 2026
மகளிர் உரிமைத் தொகை.. மாற்றம் செய்தது தமிழக அரசு

மகளிர் உரிமைத் தொகை திட்ட இணையதளத்தில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. முன்னதாக, தகுதியில்லாத பெண்கள் இந்த திட்டத்தில் ₹1,000 பெற்று வந்தால் புகாரளிக்க <


