News February 10, 2025

தினமும் லேட்டாக தூங்குபவரா நீங்கள்?

image

தினமும் இரவில் யூடியூப், வெப்சீரிஸ், ரீல்ஸ் பார்த்துவிட்டு லேட்டாக தூங்குபவரா நீங்கள்? நள்ளிரவு 1 மணிக்கு மேல் தூங்கச் செல்பவர்களுக்கு மனநலப் பாதிப்புகள் (மனச்சோர்வு, பதற்றம்) ஏற்படும் வாய்ப்பு 20-40% அதிகம் என்கிறது ஸ்டான்போர்ட் பல்கலை.,யின் ஆய்வு. நீங்கள் எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள் என்பதைவிட, எத்தனை மணிக்கு தூங்கப் போகிறீர்கள் என்பதே உங்கள் மனநலத்தை தீர்மானிக்கிறதாம். உங்க பெட் டைம் என்ன?

Similar News

News February 11, 2025

ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஹலாசனம்

image

☆முதுகெலும்பு வலிமை பெறும். ☆ஞாபக சக்தி அதிகரிக்கும். ☆15-20 வினாடிகள் இந்த ஆசனத்தை செய்யலாம். ☆சிறுநீரகம், கணையம் போன்ற உள்ளுறுப்புகள் பலம் பெறும். ☆வாயுக்கோளாறுகளை போக்குகிறது. ☆நரம்பு தளர்ச்சி வராமல் பாதுகாக்கும். ☆மாதாவிடாய் & கர்ப்ப காலங்களில் இந்த பயிற்சி செய்ய கூடாது.

News February 11, 2025

தைப்பூசம்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று லீவ்

image

முருகப்பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூசம் திருவிழா இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தைப்பூசம் தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என 2021ல் அன்றைய முதல்வர் EPS சட்டம் இயற்றினார். அதன்படி, இன்று அரசு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது.

News February 11, 2025

இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்

image

TN முழுவதும் தைப்பூச நாளான இன்று அரசு விடுமுறை என்றாலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களது அசையா சொத்துகளை மங்களகரமான நாளில் பதிவு செய்ய விரும்புவதால் இன்றைய தினம் ஆவணப் பதிவுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக காலை 10 மணி முதல் பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும். ஆனால், விடுமுறை நாளுக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

error: Content is protected !!