News April 5, 2025
Week-endல ரொம்ப நேரம் தூங்குறீங்களா? இத கவனியுங்க

உடல் ஆரோக்கியத்திற்கு தூக்கம் அவசியம் என்ற போதிலும், வேலை பளுவால் தூக்கம் பாதிக்கிறது. குறைவான தூக்கம் பக்கவாதம், மாரடைப்பு ஆகிய பிரச்னைக்கு வழிவகுக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, Week-endல் அதிக நேரம் தூங்குவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் எனவும் அறிவுறுத்துகின்றனர். ஆகவே, இனி Weekendல் நைட் ஃபுல்லா ஊற் சுற்றுவதை குறைத்துக்கொண்டு, நல்லா தூங்கி மார்னிங் லேட்டாக எழுந்துக்கோங்க!
Similar News
News April 8, 2025
திருமணத்தை மீறிய உறவு… முக்கிய காரணங்கள்

திருமண உறவை மீறி, இன்னொருவருடன் உறவு ஏற்பட இவையே முக்கிய காரணங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்: *இளம்வயதில் திருமணம் *விருப்பமில்லாத திருமணங்கள் *உடல்ரீதியான திருப்தியின்மை (60%) *உணர்வுரீதியாக தம்பதியினர் ஒன்றாதது *வாழ்க்கையில் எது முக்கியம் என்பதில் மாறுபாடு *பொதுவான ஆர்வங்கள் இல்லாதது *த்ரில் விரும்பும் மனநிலை *புறக்கணிப்பு(அ) அங்கீகரிக்கப்படாத உணர்வு *குழந்தை வளர்ப்பின் சிரமம். வேறு காரணங்கள்?
News April 8, 2025
‘டிராகன்’ இயக்குநரிடம் சேர 15,000 பேர் விருப்பம்

‘டிராகன்’ பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவிடம் உதவி இயக்குநராக இணைய 15,000 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு, தன்னிடம் உதவி இயக்குநராக விரும்புவோர் ரெஸ்யூமை அனுப்பி வைக்கலாம் என அவர் தனது X பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், இதுவரை 15,000 பேர் ரெஸ்யூம் அனுப்பியுள்ளதாகவும், ஷார்ட்லிஸ்ட் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News April 8, 2025
வக்ஃப் வாரிய சட்டம்: மோடி பெருமிதம்

வக்ஃப் வாரிய (திருத்த) சட்டம் அமலுக்கு வந்திருப்பதை சமூக நீதியை நோக்கிய உறுதியான நடவடிக்கை என மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசால் 2013-ல் நில மாஃபியாக்கள், முஸ்லிம் அடிப்படைவாதிகளை திருப்தி செய்ய வக்ஃப் வாரிய சட்டம் கொண்டு வரப்பட்டது என்றும் சாடினார். ஆனால் தற்போது முஸ்லிம் மதத்தினர், நாட்டு மக்கள் நலனுக்காகவே புது சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கூறினார்.