News February 9, 2025

காலை உணவை Skip பண்றீங்களா?

image

காலையில் வேகமாக கிளம்பும் போது, அவசரத்தில் பலரும் உணவைத் தவிர்ப்பார்கள். ஆனால், அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஏனென்றால், இதன் காரணமாக, உடலில் சோம்பல், இரைப்பை பிரச்னைகள், ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமாம். மேலும், நாள் முழுக்க தீவிர பசி ஏற்படுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பிரச்னையும் வரலாம். இனி Skip பண்றதுக்கு முன்னாடி ஒரு வாட்டி யோசிங்க!

Similar News

News September 9, 2025

டிராகனை பாராட்டிய அல்லு அர்ஜுன்

image

டிராகன் பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவை அல்லு அர்ஜுன் பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அஷ்வத், நீங்கள் காட்டிய அன்பிற்கும், தெரிவித்த பாராட்டுக்களுக்கும் நன்றி என கூறியுள்ளார். இந்த சந்திப்பின் போது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் உடனிருந்துள்ளார். இதையடுத்து, இவர்களின் கூட்டணியில் படம் உருவாக வேண்டும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

News September 9, 2025

செப்டம்பர் 9: வரலாற்றில் இன்று

image

*1799 – பாஞ்சாலக்குறிச்சி கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது. *1850 – கலிபோர்னியா 31-வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது. *2002 – பீகாரில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் 130 பேருக்கு மேல் உயிரிழந்தனர். *1967 – பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பிறந்த நாள்.*1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து தஜிகிஸ்தான் விடுதலையடைந்தது. *2011 – நடிகை காந்திமதி மறைந்த நாள்.

News September 9, 2025

தனியாரை நாடும் விவசாயிகள்.. ஏன் தெரியுமா?

image

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ₹60 லஞ்சம் கேட்கப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். அரசு கொள்முதல் நிலையங்களில் உலர்த்தும் வசதி, சாக்குப்பை இருப்பு இல்லை எனவும் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதில்லை என்றும் விவசாயிகள் கூறினர். அரசு கொள்முதல் நிலையங்களில் பல பிரச்னைகள் இருப்பதால், தனியாரில் குவிண்டாலுக்கு ₹2,300 கொடுத்தாலும் தாங்கள் அதை ஏற்றுக்கொள்வதாக விவசாயிகள் குறிப்பிட்டனர்.

error: Content is protected !!