News February 11, 2025
ஆபிசில் சீக்ரெட்டை ஷேர் பண்றீங்களா?
ஆபிசில் சீக்ரெட்டுகளை பகிர்வது சரியானது அல்ல என சைக்காலஜிஸ்டுகள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக, பர்சனல் லைஃப், நிதி நிலை குறித்து பேசவே கூடதாம். இதற்கு சில காரணங்களும் சொல்கிறார்கள். சம்பளம் குறித்து அதிகமாக பேசுவது பொறாமைக்கு வழிவகுக்கலாம். பர்சனல் விஷயங்களை பகிர்ந்தால், ஏதோ ஒரு மனஸ்தாபத்தால் பிரிய, நம்மை குறித்த சீக்ரெட் வெளியாகி விடுமோ என்ற தேவையற்ற பதற்றத்தையும் கொடுக்கும். உஷாரா இருங்க!
Similar News
News February 11, 2025
வார விடுமுறை: குவியும் சிறப்பு பஸ்கள்
வார விடுமுறை என்றாலே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு ஆயிரக்கணக்கானோர் புறப்பட்டு விடுகின்றனர். அந்த வகையில், வார விடுமுறைக்கு ஊருக்கு செல்பவர்களுக்காக, வரும் 14, 15ஆம் தேதிகளில் கிளாம்பாக்கத்தில் இருந்து பிற ஊர்களுக்கு 485 சிறப்பு பஸ்களும், கோயம்பேட்டில் இருந்து 102 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
News February 11, 2025
எளிதாக உடல் எடையை குறைக்கலாம்
பலவித டயட்களுக்கு மத்தியில் உடல் எடையை குறைப்பதற்கு என்றுமே உறுதுணையாக இருக்கும் எளிமையான டயட், Calorie Deficit டயட்தான். அதாவது கலோரி என்பது நமது உடலுக்கான எரிபொருள். நாளொன்றுக்கு நமக்கு தேவைப்படும் கலோரிகளை விட குறைவாக சாப்பிடும்போது உடல் எடை தானாக குறையும். இதனை சரியாக கணக்கிட்டு, புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, நார்ச்சத்து ஆகியவற்றை சரி விகிதத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். எடை குறையும்.
News February 11, 2025
தவெகவில் ‘இளம்பெண்கள்’ அணி உதயம்!
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ள விஜய்யின் தவெக, 28 அணிகளை இன்று அறிவித்துள்ளது. இதுவரை வேறு எந்தக் கட்சியிலும் இல்லாத புதுப்புது அணிகள் தவெகவில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, பெண்கள் அணி, இளம்பெண்கள் அணி, சிறார் அணி, குழந்தைகள் அணி, திருநங்கைகள் அணி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அணி, மீடியா அணி, உண்மை சரிபார்ப்பு அணி, உள்ளிட்ட அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.