News September 20, 2025
இந்த க்யூட் குழந்தையை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?

‘போற போக்க பார்த்தா உங்கள எனக்கு பிடிச்சிரும் போலருக்கே’ என்று ‘வீரம்’ படத்தில் க்யூட்டாக பேசியிருப்பார் யுவினா. இவர் தற்போது ‘ரைட்’ என்ற படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இதனை அறிந்த நெட்டிசன்கள், ‘நமக்குதான் வயசாகிடுச்சு போலயே’ என்று கண்ணீர் விடுகின்றனர். இந்நிலையில், குழந்தையாகவும் ஜோடியாகவும் ரஜினியுடன் மீனா நடித்தது போல், தான் அஜித்துடன் நடிக்க முடியாது என்று யுவினா கூறியுள்ளார்.
Similar News
News September 20, 2025
ராசி பலன்கள் (21.09.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News September 20, 2025
விவசாயிகள் வயிற்றில் அடித்து ₹40 கமிஷன்: விஜய்

நெல் கொள்முதலில் திமுக அரசு கோடிக்கணக்கில் கமிஷன் அடிப்பதாக விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் ஒன்றான திருவாரூரில் பேசிய அவர், ஒரு நெல் மூட்டைக்கு ₹40 கமிஷன் அடித்து கோடிக்கணக்கில் கொள்ளை அடித்துள்ளதாக விமர்சித்துள்ளார். 40-40 தொகுதி வெற்றி என கணக்கு போட்ட திமுக, தற்போது விவசாயிகளின் வயிற்றில் அடித்து ₹40 கமிஷன் பெறுவதாகவும் ஆவேசமாக பேசினார்.
News September 20, 2025
சூரிய கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை

இந்துமத நம்பிக்கையின் அடிப்படையில் <<17774785>>நாளை சூரிய கிரகணத்தின்<<>> போது செய்ய வேண்டியவை: *கடவுளை தியானிக்கவும் *கிரகணத்தின் போது உங்கள் ஆற்றலை சேமிக்க வீட்டிலேயே இருக்கவும் *மந்திரங்களை உச்சரிக்கலாம், ராமாயணம், பகவத் கீதை நூல்களை பாராயணம் செய்யலாம் *கடவுள் சிலைகளை மூடி வைக்கவும் *கிரகணத்துக்குபின் அனைத்து இடங்களிலும் கங்கை தீர்த்தத்தை தெளித்து, உங்கள் ஆராவை தூய்மையாக்குங்கள். பின் குளிக்கவும். SHARE IT.