News September 27, 2024
கால்நடைகள் வளர்க்கிறீர்களா? இது உங்களுக்குதான்

கால்நடைகளுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அதனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள். அவர்களின் நலன் கருதி, தமிழக அரசு நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி வசதியை அளிக்கிறது. இதற்கு நீங்கள் “1962” எண்ணை அழைத்து விவரம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்தால், கால்நடை மருத்துவ ஊர்தி குறிப்பிட்ட இடத்துக்கே வந்து சிகிச்சை அளிக்கும். SHARE IT.
Similar News
News August 13, 2025
விஜயகாந்த் Photoவை விஜய் பயன்படுத்தலாம்.. பிரேமலதா

தேமுதிகவை தவிர யாரும் விஜயகாந்த் Photo-வை பயன்படுத்தக்கூடாது; கூட்டணி கட்சிகள் மட்டுமே தேர்தல் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரேமலதா சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், மானசீக குரு விஜயகாந்த் என தெரிவித்தால், போட்டோவை விஜய் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரேமலதா நேரடியாக அனுமதி அளித்துள்ளார். அவரின் இந்த திடீர் மனம் மாற்றத்திற்கு கூட்டணி கணக்குதான் காரணம் என சொல்லப்படுகிறது.
News August 13, 2025
மேடையில் பேசுவோமா? ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்

அதிமுக – திமுக சாதனைகள் குறித்து மேடை போட்டு பேசுவோமோ என CM ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால் விடுத்துள்ளார். பர்கூரில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட திருமண உதவித் திட்டம், தாலிக்குத் தங்கம், மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் என ஏழைகளுக்காக வழங்கப்பட்ட திட்டங்களை திமுக அரசு நிறுத்தியுள்ளதாக கூறினார். விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த இந்த அரசுக்கு தெரியவில்லை எனவும் விமர்சித்தார்.
News August 13, 2025
விஜய் போட்டியிடும் தொகுதி? விஜயகாந்த் வழியில் விஜய்?

2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு உள்ளது. மதுரையில் அவர் போட்டியிட இருப்பதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அவர் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜயகாந்த் தன்னுடைய ஆரம்ப கால தேர்தல் வெற்றியை இப்பகுதியிலிருந்து பெற்றார். இளைஞர்கள் அதிகளவில் இருப்பதாலேயே இந்த மாவட்டத்தை விஜய் குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.