News April 14, 2025
அடிக்கடி அலாரம் வைப்பவாரா நீங்கள்.. இது முக்கியம்

பலரும் சரியான நேரத்தில் எழுந்திருக்க வேண்டும் என அலாரம் வைக்கிறோம். ஆனால், அலாரம் அடித்தால் அதை ஆஃப் செய்து 10 நிமிடம் தூங்கி எழுந்திருக்கலாம் என மீண்டும் அலாரம் வைத்து தூங்குவோம். இதுபோன்று அலாரம் வைப்பது உடலுக்கு பல தாக்கத்தை ஏற்படுத்துமாம். தூக்கத்திலிருந்து மீண்டும் மீண்டும் விழுத்துக்கொள்வதால் கண்கள் மற்றும் இதய பாதிப்பு ஏற்பட வாய்புள்ளதாம். அன்றைய நாள் முழுவதும் சோர்வும் ஏற்படுமாம்.
Similar News
News January 7, 2026
கூட்டணி அறிவிப்பு வெளியான உடனே அன்புமணிக்கு அதிர்ச்சி

அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக EPS சற்றுமுன் அறிவித்தார். இந்நிலையில், அதிமுகவுடன் மேற்கொண்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை சட்டவிரோதமானது; கட்சி விதிகளின்படி தனக்கு மட்டுமே கூட்டணி குறித்து பேச உரிமை இருப்பதாக அறிவித்து அன்புமணிக்கு ராமதாஸ் அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும், 2026 தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஜன.9-ம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 7, 2026
BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

காலையில் ஆபரணத் தங்கத்தின் விலை ₹320 உயர்ந்த நிலையில், மாலையில் சரசரவென குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 குறைந்து ₹1,02,400-க்கும், கிராமுக்கு ₹70 குறைந்து ₹12,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களின் நம்மூரிலும் விலை குறைந்துள்ளது.
News January 7, 2026
நானே கொடுத்து, நானே வாங்குவேன்: டிரம்ப் அடாவடி

வெனிசுலாவிடம் இருந்து 50 மில்லியன் பேரல்கள் வரை உயர்தர <<18761816>>கச்சா எண்ணெய்யை<<>>, சந்தை விலைக்கே அமெரிக்கா வாங்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் இதில் டிவிஸ்ட் என்னவென்றால், கச்சா எண்ணெய் வாங்குவதற்கான பணத்தை வெனிசுலாவின் இடைக்கால அரசிடம் வழங்காமல், தானே வைத்துக் கொள்ளவுள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அந்த பணத்தை வெனிசுலா, USA மக்களின் நலனுக்காக பயன்படுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.


