News January 8, 2025
அடிக்கடி வெளிநாட்டு நம்பரில் இருந்து போன் வருதா?

அடிக்கடி வெளிநாட்டு நம்பர்களில் வரும் மோசடி அழைப்புகளைத் தடுப்பதற்கு; * ஸ்பாம் எண்களை சிவப்பு நிறத்தில் காட்டி எச்சரிக்கும் TrueCallerஐ உபயோகிக்கலாம் * தொடர்ந்து அழைப்புகள் வந்தால், அந்த எண்ணை பிளாக் செய்யுங்கள் * அது குறித்து 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணில் புகார் அளிக்கவும் * வாட்ஸ்அப் வெளிநாட்டு நம்பரில் இருந்து வரும் அழைப்புகளை தடுக்க “Silent Unknown Calls” என்ற அம்சத்தை பயன்படுத்தலாம்.
Similar News
News January 14, 2026
கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(ஜன.13) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.14) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 14, 2026
தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (13.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். தாலுக்கா வாரியாக உள்ள காவல்துறை அதிகாரிகளின் தனி தொலைபேசி எண் இங்கே வழங்கப்பட்டுள்ளது தேவைப்படும் பொதுமக்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 14, 2026
திருச்சி: எஸ்.பி தலைமையில் குற்றத்தடுப்பு கூட்டம்

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் தலைமையில் நேற்று (ஜன.13) மாதாந்தர குற்றத் தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் பங்கேற்று குற்ற வழக்கின் நிலுவை தன்மைகள் மற்றும் நிலைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் எஸ்.பி காவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.


