News February 12, 2025
அடிக்கடி நகம் கடிக்கும் பழக்கமுடையவரா?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739357721452_1231-normal-WIFI.webp)
நகம் கடிக்கும் பழக்கமுடையவர்கள், அதனால் எவ்வளவு பிரச்னை வரும் என தெரியுமா? நகம் கடிப்பது அழற்சியை உண்டாக்கி, காயங்களின் காரணமாக நகச்சொத்தை வரலாம். அழுக்குகளில் இருக்கும் பாக்டீரியாக்களால் காய்ச்சல், சளி வரலாம். நகம் வயிற்றில் போனால், பிரச்னைகளை உண்டாக்கும். கடிக்கும் போது தோலில் சிறு வெட்டுகள் ஏற்பட்டு தோல் பிரச்னைகளை வரலாம். பற்கள் மற்றும் ஈறுகளில் ப்ரூக்ஸிசம் பிரச்னை வரும். SHARE IT
Similar News
News February 13, 2025
கர்ப்பத்தை கலைக்கும் உரிமை உள்ளது
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739176327886_1241-normal-WIFI.webp)
பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கருவை கலைத்துக் கொள்ளும் உரிமை உள்ளதாக அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 17 வயது சிறுமி தொடர்ந்த வழக்கில், அவருக்கு குழந்தையை வளர்க்கும் பக்குவம் இல்லை என்று வழக்கறிஞர் வாதிட்டார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சிறுமியை கருவை கலைக்க விடாமல் செய்வது அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று கூறி கருவை கலைக்க உரிமையளித்தனர்.
News February 13, 2025
ராசி பலன்கள் (13.02.2025)
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739033787915_1246-normal-WIFI.webp)
மேஷம் – சாந்தம், ரிஷபம் – திறமை, மிதுனம் – சஞ்சலம், கடகம் – சிரத்தை, சிம்மம் – வாழ்வு, கன்னி – சிக்கல், துலாம் – போட்டி, விருச்சிகம் – இன்பம், தனுசு – பாசம், மகரம் – பணவரவு, கும்பம் – பகை, மீனம் – குழப்பம்.
News February 13, 2025
தவெகவில் உள்ள அனைவருமே குழந்தைகள்தான்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739377394652_1204-normal-WIFI.webp)
பட்ஜெட்டை விமர்சித்த விஜய்யை கடுமையாக சாடியுள்ளார் அண்ணாமலை. பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றி எந்த அம்சமும் இல்லை என தவெக தலைவர் விஜய் கூறுகிறார். ஐயா, இது பட்ஜெட் தாக்கல். ஜிஎஸ்டி மீட்டிங் கிடையாது. இது கூட தெரியாதவர்கள்தான் அரசியல் மாற்றம் பற்றி பேசுகிறார்கள். அக்கட்சியில் அனைவருமே குழந்தைகளாக இருப்பதால்தான் தவெகவில் ‘குழந்தைகள் அணி’ உருவாக்கப்பட்டுள்ளது என அண்ணாமலை கிண்டலடித்தார்.