News February 12, 2025
G Pay, PhonePeல் அடிக்கடி பேலன்ஸ் பாக்குறீங்களா?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739346271342_1231-normal-WIFI.webp)
‘Jumped’ என்ற UPI மோசடி பரவுகிறது. திடீரென அக்கவுண்டிற்கு ஒரு சிறிய தொகை டெபாசிட்டாகிறது. அது கூடவே ‘Collect money’ Request வருகிறது. குழப்பத்தில் என்ன இது என சரிபார்க்க, PIN நம்பரை போட்டால், அக்கவுண்டில் இருந்து பெரிய தொகையை நேக்காக திருடுகிறார்கள். இந்த மோசடிகள் அதிகரித்ததை அடுத்து, இது குறித்து நடவடிக்கைகளில் NPCI எடுத்துள்ளது. தெரியாத நம்பர்களில் இது போன்ற மெசேஜுக்கு பதிலளிக்க வேண்டாம்.
Similar News
News February 12, 2025
கும்பமேளாவில் புனித நீராடிய கஸ்தூரி!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739358237283_1204-normal-WIFI.webp)
உ.பி.யில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவுக்கு சென்ற நடிகை கஸ்தூரி, அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடினார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். மேலும், தனது மகன் சங்கல்ப் ரவிக்குமாருடன் புனித நீராடிய புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.
News February 12, 2025
புதிய சாதனை படைத்த சுப்மன் கில்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739359471308_1031-normal-WIFI.webp)
அகமதாபாத் மோடி மைதானத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். இதே மைதானத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு நியூசி. அணிக்கு எதிராக டி20 போட்டியில் 126 ரன்களையும், ஆஸி. அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 128 ரன்களையும் எடுத்திருந்தார். இதற்குமுன், PAK வீரர் பாபர் அசாம் உள்ளிட்ட 4 வீரர்கள் இதேபோன்ற சாதனையைப் இதற்குமுன் படைத்துள்ளனர்.
News February 12, 2025
இன்று Ice Moon பார்க்கலாம். ஏன் தெரியுமா?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739354041070_1246-normal-WIFI.webp)
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் தோன்றும் பௌர்ணமி நிலவை Snow Moon என்று அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அழைக்கின்றனர். பெரும்பாலும் இந்த மாதத்தில்தான் அங்கு பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் இந்தப் பெயர் வந்தது. இதனை சிலர், Storm Moon என்றும், சிலர் Ice Moon என்றும் அழைக்கின்றனர். இன்றுதான் பௌர்ணமி நிலவு முழுமையாகக் காட்சியளிக்கவுள்ளது. கண்டு களியுங்கள் மக்களே.