News September 14, 2025
புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா? இதை பண்ணுங்க!

புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி இருந்தால் பட்டா பெற முடியுமா? ஆம், 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும். அடையாள அட்டை, வசிப்பிட சான்று, மின்கட்டண ரசீது உள்ளிட்டவற்றுடன் பட்டா கோரி வட்டாட்சியர் அலுவலக இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரிகள் நிலத்தை ஆய்வு செய்து எந்த பிரச்னையும் இல்லையெனில் பட்டா வழங்குவார்கள். SHARE IT.
Similar News
News September 14, 2025
கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய அணி

ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் இன்னும் சற்று நேரத்தில் இந்தியா- பாக் அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டத்தில், பஹல்காம் தாக்குதலுக்கு நமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பின்னணியில் இருந்த பாக்.குடன் இந்திய அணி விளையாடக் கூடாது என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
News September 14, 2025
பயங்கரவாத அமைப்புக்கு நிதி வழங்கும் பாக்., அரசு

பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் வாயிலாக சரியான பதிலடி கொடுத்த இந்தியா, முரிட்கேவில் அமைந்துள்ள லக்ஷர்-இ-தொய்பாவின் தலைமையகத்தை தரைமட்டமாக்கியது. இந்நிலையில், இதனை மறுகட்டமைப்பு செய்ய பாக்., முதற்கட்டமாக ₹1.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்காக, ‘வெள்ள நிவாரணம்’ என்ற பெயரிலும் LeT ஆதரவாளர்கள் நாடு முழுவதும் நிதி திரட்டுவதாகவும் கூறப்படுகிறது.
News September 14, 2025
உலக சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு 2-வது தங்கம்

இங்கிலாந்தில் நடைபெறும் உலக பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா 2-வது தங்கத்தை வென்றது. பெண்கள் 48 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் மீனாட்சி ஹூடா, ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கஜகஸ்தானின் நாஜிம் கைசைபேயை எதிர்கொண்டார். கடுமையான போட்டியின் முடிவில் மீனாட்சி 4-1 என்ற கணக்கில் வென்றார். ஏற்கெனவே 58 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது