News April 13, 2025
உங்களுக்கென நேரம் ஒதுக்குறீங்களா?

கடமைகள் நிறைந்த வாழ்வில் குடும்பத்துக்காக ஓடுபவர்களே! ஒரு நிமிடம் அந்த ஓட்டத்தை நிறுத்தி, உங்களுக்காக ஒரு நாளில் எவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்கள் என யோசியுங்கள். இயற்கையின் கொடையான வாழ்க்கையில் நமக்கென கொஞ்சம் நேரம் வேண்டும். கடமையை விட்டு, கனவுகளை நோக்கி ஓடுங்கள் என கூறவில்லை. பிடித்த படம், நண்பரை சந்திப்பது என மன நிறைவை கொடுக்கும் சின்ன சின்ன விஷயங்களை செய்யுங்கள். அன்றைய நாள் அழகாகும்.
Similar News
News September 5, 2025
BREAKING: PMK ம.க.ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

பாமக மூத்த தலைவரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலின் மீது, அவரது அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில், நல்வாய்ப்பாக அவர் தப்பியபோதிலும், அலுவலகத்தில் கண்ணாடி, கதவு உள்ளிட்டவை சேதமடைந்துள்ளது. தற்போது ராமதாஸின் ஆதரவாளராக உள்ள ம.க.ஸ்டாலின், கடந்த 2024 லோக்சபா தேர்தலில் மயிலாடுதுறையில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
News September 5, 2025
சகோதரத்துவம் வளர உழைப்போம்: EPS வாழ்த்து

உலகெங்கும் மகிழ்ச்சியுடன் மிலாடி நபி கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகளை EPS தெரிவித்துள்ளார். நபிகள் நாயகம் போதித்த சாந்தியும், சமாதானமும் சகோதரத்துவமும் இன்றைய உலகின் இன்றியமையாத தேவைகள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நன்னாளில் அமைதி தழைக்கவும், சமாதானம் ஓங்கவும், சகோதரத்துவம் வளரவும் உழைப்போம் எனவும் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
News September 5, 2025
BREAKING: வெளுத்து வாங்கும் கனமழை

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு பரவலாக மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. குறிப்பாக செப்.8 மற்றும் 9-ம் தேதிகளில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுகோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகையில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் 2 நாள்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம். குடையை ரெடியா வையுங்க மக்களே..!