News January 5, 2025

உங்களுக்காக நேரம் ஒதுக்குகிறீர்களா?

image

கடமைகள் நிறைந்த வாழ்க்கையில் குடும்பத்துக்காக ஓடி கொண்டிருப்பவர்களே, ஒரு நிமிடம் ஓட்டத்தை நிறுத்தி உங்களுக்காக ஒரு நாளில் எவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்கள் என யோசியுங்கள். இயற்கையின் கொடையான வாழ்க்கையில் நமக்கு என கொஞ்சம் நேரம் வேண்டும். கடமையை விட்டு கனவுகளை நோக்கி ஓடுங்கள் என கூறவில்லை. பிடித்த படம், நண்பரை சந்திப்பது என உங்களுக்கு மன நிறைவை கொடுக்கும் விஷயங்களை செய்யுங்கள். அன்றைய நாள் அழகாகும்.

Similar News

News September 15, 2025

RRB-யில் 368 காலியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 368 Section Controller பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு இன்றுமுதல், வரும் அக்டோபர் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்து 20- 33 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 3 கட்ட தேர்வுக்கு பிறகு தேர்ச்சி பெறுவோருக்கு மாதம் ₹35,400 வரை சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

News September 15, 2025

முடிவுக்கு வந்த பாமக பிரச்னை: K.பாலு

image

பாமகவின் தலைமை, சின்னம் <<17715168>>அன்புமணியின் வசம்<<>> வந்துள்ளதன் மூலம் குழப்பம் தீர்ந்துவிட்டதாக K.பாலு தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில், பாமக வேட்பாளர்களை அன்புமணிதான் அறிவிப்பார் எனவும், A, B படிவங்களில் அவர்தான் கையொப்பமிடுவார் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், ராமதாஸின் வழியை பின்பற்றியே தாங்கள் பயணிப்போம் என்ற அவர், பிரிந்து சென்றவர்கள் தங்களுடன் வரலாம் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

News September 15, 2025

BREAKING: வங்கிக் கணக்கில் ₹1,000 வந்தது

image

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை(KMUT) திட்டத்தின் 25-வது தவணை ₹1,000 சற்றுமுன் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. 1.15 கோடி பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டதாக அரசு கூறியுள்ளது. மேலும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மூலம் விடுபட்ட நபர்களிடம் இருந்து இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவை பரிசீலனை நிலையில் உள்ளது. அவர்களுக்கு ஓரிரு மாதங்களில் வழங்கப்படும் என உதயநிதி கூறியிருந்தார்.

error: Content is protected !!