News August 25, 2025
பனீரை விரும்பி சாப்பிடுகிறீர்களா..

தற்போது பல இந்தியாவில் 83% போலி பனீர்கள் விற்கப்படுவதாக Food Safety and Standards Authority of India எச்சரித்துள்ளது. இந்த போலி பனீர், மைதா, ArrowRoot powder, Urea போன்றவற்றை கலந்து தயாரிக்கப்படுகிறது. பனீரின் மீது Iodine Tincture-ஐ விடும் போது, அது கருப்பாக மாறினால், அது போலி. ஒரிஜினல் பனீரில், அது படிமனாக தங்கி விடும். குடல், கிட்னி போன்றவற்றுக்கு இந்த போலி பனீர் பிரச்னையை உண்டாக்குமாம்.
Similar News
News August 25, 2025
BCCI – Dream 11 ஒப்பந்தம் முறிந்தது

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மசோதாவுக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு 2023 முதல் ஸ்பான்சர்ஷிப் வழங்கி வந்த Dream 11 நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை கைவிட்டதாக BCCI தெரிவித்துள்ளது. இனி இதுபோன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படாது என்றும் கூறியுள்ளது. எனவே, புதிய ஸ்பான்சரை தேடும் முயற்சியில் BCCI இறங்கியுள்ளது.
News August 25, 2025
காதலர்களே… இனி கவலை வேண்டாம்.. இது உங்களுக்காக

தமிழகம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம் என CPM மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் சாதி மறுப்பு திருமணங்களுக்காக தனிப்பட்ட ஏற்பாடுகள் இல்லை என சாடிய அவர், காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் அலுவலகங்கள் 24 மணிநேரமும் திறந்தே இருக்கும் என்றார். சாதி ஆணவக்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.
News August 25, 2025
கல்கி இயக்குநருடன் கைகோர்க்கும் ரஜினிகாந்த்?

லால் சலாம், வேட்டையன், கூலி ஆகிய படங்களுக்கு கிடைத்த கலவையான விமர்சனங்களால், அடுத்த படத்தின் கதை தேர்வில் ரஜினி தீவிர கவனம் செலுத்துகிறாராம். இந்நிலையில் மகாநதி (நடிகையர் திலகம்), கல்கி 2898 ஆகிய படங்களின் இயக்குநர் நாக் அஷ்வின், ரஜினியிடம் கதை சொல்லியுள்ளாராம். இது அவருக்கு பிடித்துபோக, கதையை டெவலப் செய்ய சொல்லியுள்ளாராம். எனவே ரஜினியின் அடுத்த படத்தை நாக் அஷ்வின் இயக்குவார் என கூறப்படுகிறது.