News April 28, 2025

சர்க்கரையை விரும்பி சாப்பிடுவீங்களா..?

image

டீ, காபியில் கொஞ்சம் சர்க்கரை தூக்கலாக போட்டு குடிப்பீங்களா? அதிகப்படியான சர்க்கரை நுகர்வு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எடை அதிகரிப்பதில் சர்க்கரைதான் முக்கிய காரணம். இவை, இதயத்தை தான் கடுமையாக பாதிக்கும். புற்றுநோய், மனச்சோர்வு, கல்லீரல் கொழுப்பு போன்றவற்றையும் வரலாம். மேலும், சிந்திக்கும் திறனையும் இது பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Similar News

News November 9, 2025

ஒருபக்கம் மாசு, ஒருபக்கம் குளிர்: தவிக்கும் தலைநகர்

image

டெல்லியில் காற்று மாசு தீவிரமடைந்து, ஒவ்வொரு நாளும் தரக்குறியீடு மோசமாகவே பதிவாகிறது. இந்நிலையில், வடமேற்கு காற்றின் தாக்கத்தால் தலைநகரில் குளிர் அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 11°C ஆக பதிவாகியுள்ள நிலையில், அடுத்த 4 முதல் 5 நாள்களுக்கு குளிர் மேலும் அதிகரிக்கும் என IMD கணித்துள்ளது. ஒரு பக்கம் காற்று மாசு, மறுபக்கம் குளிர் என டெல்லி மக்கள் தவித்து வருகின்றனர்.

News November 9, 2025

தங்கம் விலை மேலும் குறைகிறது

image

தங்கம் விலை கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்தில் உள்ளதால் என்ன நடக்கிறது என்பது புரியாமல் பாமர மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இது தொடர்பாக நகை வியாபாரிகளிடம் கேட்டபோது, அமெரிக்காவின் FOMC 2-வது முறையாக வட்டியை குறைத்ததால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை மந்தமான சூழலில் உள்ளது. இதனால், வரும் நாள்களிலும் விலை மேலும் குறையும் எனக் கூறியுள்ளனர். ஒருவேளை உயர்ந்தாலும் ₹500 – ₹1,000 வரை தான் இருக்குமாம்.

News November 9, 2025

ஒரு செம்மரத்தை கூட இனி தொட முடியாது: பவன் கல்யாண்

image

பல ஆண்டுகளாக ஆந்திராவில் செம்மர கடத்தல் நடைபெற்று வருகிறது. கடத்தல் சம்பவம் தொடர்பாக ஏராளமான தமிழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், செம்மர கடத்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர DCM பவன் கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்கப்பட உள்ளதாக கூறிய அவர், ஒரு செம்மரத்தை கூட இனி யாரும் தொட துணிய மாட்டார்கள் என்று உறுதியளித்துள்ளார்.

error: Content is protected !!