News August 25, 2025
Chewing gum விரும்பியா நீங்கள்? உயிருக்கே ஆபத்து..!

சாதாரண Chewing Gum-ஆல் உயிருக்கே ஆபத்து வரலாம் என சொன்னால் நம்பமுடிகிறதா? 1 கிராம் chewing gum-ல் சுமார் 100-600 மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இருப்பதாக Journal of national medicine-ன் ஆய்வுகள் கூறியுள்ளது. இது, நுரையீரல், பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை ஏற்படுத்துமாம். ஏற்கெனவே, 1 ஆண்டுக்கு சராசரியாக 39,000-52,000 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் ஒரு மனிதனின் உடலுக்குள் செல்வதாக தரவுகள் கூறுகின்றன.
Similar News
News August 25, 2025
அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் நற்செய்தி

பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற MHC மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு SC இடைக்காலத் தடை விதித்துள்ளது. MHC உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி SC-ல் மேல்முறையீடு செய்தது. இந்த மனு, நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு 4 வாரத்திற்குள் TN அரசு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
News August 25, 2025
திருப்பதியில் நடிகர் ரவி மோகன்… காரணம் தெரியுமா ?

இயக்குநர், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் திருப்பதி எழுமலையானை தரிசித்துள்ளார். சென்னையில் நாளை ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை தொடங்கி அவர் தயாரிக்கும் புதிய படங்களின் அறிவிப்பை வெளியிடவுள்ளார். தொடங்கும் தொழில் தழைத்தோங்க ரவி மோகன் ஏழுமலையானை தரிசித்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட அவர் சபரிமலைக்கு மாலை போட்டு ஐயப்பனை தரிசித்திருந்தார்.
News August 25, 2025
2026 தேர்தலுடன் திமுக கதை முடிந்துவிடும்: EPS

2021 பேரவைத் தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதியில் 10% கூட நிறைவேற்றவில்லை என்று EPS குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக கேஸ் மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதை பற்றி கேட்டால், 98% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சையாக பொய் சொல்கிறார்கள் என சாடிய அவர், 2026 தேர்தலுடன் திமுக கதை முடிந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.