News August 13, 2024
மாளவிகா சிகப்பு உடையில் ஏன் வருகிறார் தெரியுமா?

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் நடித்துள்ள ‘தங்கலான்’ படம் ஆக.15ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் மாளவிகா சிகப்பு நிற உடையிலேயே வருகிறார். அதாவது இப்படத்தில் அவரது கதாபாத்திரம் வரும் காட்சிகள் எல்லாம் சிகப்பு நிறத்தில் படமாக்கப்பட்டுள்ளதால் இந்த உடை அணிந்து வருவதாக மாளவிகா தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு யாரெல்லாம் வெயிட்டிங்?
Similar News
News November 21, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக சரிவைக் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹40 குறைந்து ₹11,460-க்கும், சவரனுக்கு ₹320 குறைந்து ₹91,680-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் நம்மூர் சந்தையில் 2 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,120 குறைந்துள்ளது. இதனால், நடுத்தர மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
News November 21, 2025
வண்ணங்களின் களஞ்சியம்.. இன்று சர்வதேச டிவி தினம்

இன்று சர்வதேச டிவி தினம் கொண்டாடப்படுகிறது.
வீட்டு ஹாலில் TV வைத்து மாடியில் ஒருவர் ஆன்டெனா திருப்பி கீழே படம் வந்துருச்சா? என கத்தும் குரல்களுக்கு இடையே, அத்திரை மின்னுவது ஒரு மாயாஜாலம். புள்ளியாய் தெரிந்த திரை விலகி, ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சியை இமைக்காமல் தெருவே ஒன்று கூடி ரசித்த அந்த தருணங்களால், டிவி ஒரு இயந்திரமாக தெரியவில்லை; அது மகிழ்ச்சியின் சாவியாக இருந்தது. நீங்க டிவி வாங்கிய ஆண்டு?
News November 21, 2025
பட்டாவில் புதிய மாற்றம்.. தமிழக அரசு அறிவித்தது

வில்லங்க சான்று(EC) போல, பட்டாவின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் ‘பட்டா வரலாறு’ என்ற புதிய சேவையை அடுத்த வாரம் TN அரசு செயல்பாட்டிற்கு கொண்டு வருகிறது. இதன்மூலம், அந்த நிலத்தின் உரிமையாளர், பட்டா எந்த காலகட்டத்தில் யார் யாருக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது உள்ளிட்ட விவரங்களை எளிமையாக அறிய முடியும். <


