News August 7, 2024
விமானங்களில் தேங்காய்க்கு தடை… ஏன் தெரியுமா?

விமானம், பயணிகளின் பாதுகாப்புக்காக இ-சிகரெட், லைட்டர், பவர் பேங்க், ஸ்பிரே பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காய்க்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏன் தெரியுமா? தேங்காய்களில் அதிக எண்ணெய் சத்து உள்ளது. பயணிகள் அவற்றை எடுத்து சென்றால், அதீத வெப்பத்தால் தீப்பற்றி பெரிய விபத்துக்கு வழிவகுக்கும் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
திண்டுக்கல்லில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து!

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே திண்டுக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு குடகனாறு பாலம் அருகே கம்பத்திலிருந்து பெங்களூருக்கு அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பெண்கள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 22, 2025
தனுஷின் திறமைக்கு ரசிகை: கீர்த்தி சனோன்

தனுஷின் திறமைக்கு நான் ரசிகை என கீர்த்தி சனோன் கூறியுள்ளார். பல படங்களை இயக்கியிருப்பதால் காட்சிகள் எப்படி திரையில் வெளிப்படும் என்ற புரிதல் தனுஷுக்கு இருப்பதாகவும், பல நுணுக்கங்களை அறிந்திருக்கும் தனுஷுடன் நடித்ததில் மகிழ்ச்சி எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், நல்ல சீன்களை நடித்து முடித்த பின் இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
புதிய பிரசாரத்தை முன்னெடுக்கும் சீமான்

2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி சீமான் புதிய பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். நெல்லையில் நேற்று நடந்த கடலம்மா மாநாட்டு மேடைக்கு கையில் ரிமோர்ட்டுடன் சீமான் வந்தார். அப்போது பெரிய திரையில் வீடியோ காட்சிகளுடன் விளக்கி பேசிய அவர், இனிமேல் டிஜிட்டல் முறையிலும் பரப்புரை செய்யப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து, கட்சி நிர்வாகிகளும் டிஜிட்டல் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.


