News August 12, 2024
இந்திய அணிக்காக முதல் சதமடித்த வீரர் யார் தெரியுமா?

இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதமடித்தவர் டெண்டுல்கர் என்பது தெரிந்திருக்கும். ஆனால் முதன்முதலில் இந்தியாவுக்காக சதமடித்த வீரர் தெரியுமா என்றால் கேள்விக்குறிதான். பஞ்சாப்பை சேர்ந்த லாலா அமர்நாத்தே அந்த வீரர். 1933ஆம் ஆண்டு முதன்முதலில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக அவர் 118 ரன்கள் குவித்தார். அப்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிடையாது.
Similar News
News March 7, 2026
வாக்கு என்னும் மையங்களை ஆட்சியர் நேரில் ஆய்வு

இந்திலி தனியார் கல்லூரியில் அமைக்கப்பட உள்ள வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (மார்ச்.6) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடன் கலந்து கொண்டனர்.
News March 7, 2026
ராசி பலன்கள் (07.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News March 7, 2026
தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

ஈரான் – USA, இஸ்ரேல் இடையேயான போர் தொடங்கிய அடுத்த நாளே தங்கம் விலை சவரனுக்கு ₹7,000 அதிகரித்தது. அதன்பிறகு, தலைகீழ் மாற்றமாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் ₹6,520 குறைந்திருப்பது நடுத்தர மக்கள், நகைப் பிரியர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. சென்னையில் தற்போது 1 கிராம் ₹15,000-க்கு கீழே சென்றுள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் கணிசமாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.


