News April 1, 2025
இவர் யார் தெரியுதா?

அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் AI-ஐ பயன்படுத்தி ‘ஜிப்லி’ கதாபாத்திரங்களாகவே தங்கள் புகைப்படத்தை மாற்றி டிரெண்ட் செய்து வருகிறார்கள். CM ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் ஆகியோரின் புகைப்படங்களும் இதேபோல் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. இதையடுத்து இன்னொரு அரசியல் பிரபலமும், தனது படத்தை (மேலே) வெளியிட அதுவும் ட்ரெண்டாகி வருகிறது. அவர் யார்னு தெரிஞ்சா, கீழே பதிவிடுங்க.
Similar News
News October 20, 2025
பிஹாரில் 24-ம் தேதி பரப்புரையை தொடங்கும் மோடி

பிஹார் மாநிலத்தில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சிகள் இரண்டும் தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன. இந்நிலையில், பிஹார் சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்தை PM மோடி வரும் 24-ம் தேதி தொடங்குகிறார். இந்த மாத இறுதிக்குள் 4 பிரச்சாரப் பேரணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
News October 20, 2025
வரலாற்றில் இன்று

*1963 – இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பிறந்தநாள்.
*1974 – பாடலாசிரியர் பா.விஜய் பிறந்தநாள்.
*1978 – இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பிறந்தநாள் .
*1991 – உத்தரகாசியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 1,000 பேர் வரை உயிரிழந்தனர்.
*2008 – தமிழ திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் நினைவுநாள்.
News October 20, 2025
நடிகர் அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீபிரசாத்

முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தெலுங்கில் வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘எல்லம்மா’ படத்தில் அவர் நடிக்க உள்ளாராம். இதற்காக முழுமையாக தனது உடலமைப்பை மாற்றி வருகிறாராம். பல்வேறு முன்னணி படங்களுக்கு இசையமைத்து வந்தாலும், நடிக்க ஆசையிருப்பதை சில பேட்டிகளில் தேவி ஸ்ரீபிரசாத் வெளிப்படுத்தி இருக்கிறார்.