News December 3, 2024
சின்ன வயதில் Cuteஆ இருக்கும் இந்த நடிகை யார்னு தெரியுதா?

அடடே! இவரே என உங்களை யோசிக்க வைப்பார் இவர். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு படங்களில் அறிமுகமானார். அஜித், விக்ரம், மாதவன் உடன் நடித்தவர் தென்னிந்தியாவிலும் வேகமாக வளர்ந்தார். அண்டங்காக்கா கொண்டைக்காரியாக தமிழகத்தையே ஆடவைத்தவர், திடீரென காணாமல் போனார். எப்படி சும்மா இருப்பது என Wildfire Photographer ஆக தற்போது கையில் கேமராவுடன் சுத்தி வருகிறார். இன்னுமா யார்’னு தெரியல. கமெண்ட்ஸ் பாருங்க…
Similar News
News August 27, 2025
இந்த லிங்குகளை கிளிக் பண்ணாதீங்க.. TN போலீஸ்

ஆன்லைன் டிரேடிங் முதலீடு மோசடியில் தொடர்புடைய மூவரை கைது செய்துள்ள TN போலீஸ், மக்களுக்கு சில எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.
✱சோஷியல் மீடியா, WhatsApp போன்றவற்றில் வரும் மெசேஜ்களை, நம்பி பணத்தை முதலீடு செய்யவேண்டாம்.
✱பேங்க் அக்கவுண்ட் விவரங்களை தெரியாதவர்களிடம் பகிர வேண்டாம்.
✱முதலீடு செய்வதற்கு முன், SEBI இணையதளத்தில் சரிபார்க்கவும் அறிவுறுத்தியுள்ளது. SHARE IT.
News August 27, 2025
மைனாரிட்டி ஆட்சி நடத்தும் NDA: ஸ்டாலின் தாக்கு

பிஹாரில் BJP-யின் துரோக அரசியல் தோற்கப் போவதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். ராகுல் காந்தி நடத்திவரும் யாத்திரையின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் மிரட்டலுக்கு ராகுல் பணிய மாட்டார் என்றார். 400 இடங்கள் என கனவு கண்ட NDA-வை, 240 இடங்களிலேயே INDIA கூட்டணி முடக்கியதாக குறிப்பிட்ட ஸ்டாலின், மெஜாரிட்டி என ஆட்டம் போட்டு வந்த அக்கூட்டணி தற்போது மைனாரிட்டி ஆட்சி நடத்தி வருவதாக தெரிவித்தார்.
News August 27, 2025
தமிழகத்தில் பள்ளிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 – 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு செப்.15 – 25-ம் தேதி வரையிலும், 9, 10-ம் வகுப்பு செப்.15 – 26-ம் தேதி வரையிலும், 11, 12-ம் வகுப்புகளுக்கு செப்.10 – 25-ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடக்கவுள்ளன. செப்.27 முதல் அக்.5-ம் தேதி வரை 9 நாள்கள் தொடர் விடுமுறையாகும். SHARE IT.