News August 3, 2024
உலகின் உயரமான பெண் யார் தெரியுமா?

துருக்கியை சேர்ந்த ரும்ஸியா கெல்கியே உலகின் பெண் ஆவார். 2014இல் 18 வயது நிரம்பியபோது, 7.07 அடி உயரத்தில் இருந்தார். இதன்மூலம் உலகின் உயரமான பெண் என்ற சாதனையை புரிந்தார். வீவர் சின்ட்ரோம் என்ற அரிய நோயே, உயரமாக வளர காரணமாகக் கூறப்படும் நிலையில், அதிக தூரம் நடக்க முடியாமல் சிரமப்படும் அவர் வால்கருடன் நடந்துசெல்கிறார். அதேபோல், பிறக்கும்போதே அவர் 5.9 கிலோ எடை இருந்துள்ளார்.
Similar News
News November 28, 2025
வெள்ளி விலை ₹12,000 உயர்ந்தது

வெள்ளி விலை மீண்டும் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் கிலோவுக்கு ₹12,000 உயர்ந்தது. இன்று(நவ.28) கிராமுக்கு ₹3 அதிகரித்து ₹183-க்கும், கிலோவுக்கு ₹3,000 அதிகரித்து ₹1,83,000-க்கும் விற்பனையாகிறது. உலக சந்தையில் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதே, இந்தியாவில் விலை அதிகரிப்புக்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
News November 28, 2025
தவெக உடன் கூட்டணி வைக்கும் அடுத்த தலைவர் இவரா?

தவெகவில் இணைந்த செங்கோட்டையன், டிடிவி தினகரனிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே பாஜக அவரிடம் கூட்டணி குறித்து பேசி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், CM வேட்பாளராக EPS இருக்கக்கூடாது என டிடிவி வைக்கும் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத இடத்தில் பாஜக இருக்கிறது. எனவே, டிடிவி தவெக பக்கம் செல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கின்றனர்.
News November 28, 2025
இம்ரான் இருப்பதற்கான ஆதாரத்தை கேட்கும் மகன்

இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை வெளியிட கோரி அவரது மகன் காசிம் வலியுறுத்தியுள்ளார். இவ்விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டும் என்ற அவர், மனிதாபிமானமற்ற முறையில் இம்ரான் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், அவரை பார்க்க அவரது சகோதரிகளுக்கு கூட அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும், அரசியல் நோக்கத்திற்காகவே அவர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.


