News October 7, 2024

தமிழகம் யார் பூமி தெரியுமா? சீறிய பவன் கல்யாண்

image

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், திமுகவை தொடர்ந்து சீண்டி வருகிறார். நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், “எனது தந்தை சென்னையில் இருக்கும் பாபாஜி ஆசிரமத்துக்கு அடிக்கடி செல்வார். பக்தி பாரம்பரியத்தில் சிறந்த விளங்கும் பூமி தமிழ்நாடு. சித்தர்கள் மற்றும் மகான்களின் பூமி தமிழ்நாடு” எனக் கூறினார். தமிழ்நாட்டை திராவிட பூமி என திமுக கூறும் நிலையில், சித்தர்களின் பூமி என பவன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 9, 2025

தூத்துக்குடி ரயில் பயணிகளே.. கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் இதோ

image

கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது. வரும் டிச. 23, 27 தேதிகளில் மைசூரில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். தூத்துக்குடியில் இருந்து 24 மற்றும் 28 தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 7:45 மணிக்கு மைசூரு சென்றடையும். SHARE

News December 9, 2025

செங்கோட்டையனின் அண்ணன் மகன் அதிமுகவில் இணைகிறார்

image

செங்கோட்டையனின் சொந்த அண்ணன் மகன் கே.கே.செல்வம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஈரோடு திமுக வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளராக இருந்த அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனையடுத்து, அவர் மீண்டும் அதிமுகவில் இணைகிறேன் என்று அறிவித்துள்ளார். கோபியில் செங்கோட்டையனுக்கு எதிராக செல்வத்தை அதிமுக களமிறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News December 9, 2025

மூட்டு வலியை விரட்டும் அற்புத மூலிகை எண்ணெய்

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ➤ஆமணக்கு எண்ணெய் மூட்டு & தசை வலியைப் போக்க சிறந்தது. மேலும், முகப்பரு, தோல் வறட்சி, முடி வளர்ச்சி போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. ➤கண்கள் சிவந்திருந்தால், இந்த எண்ணெய்யை 2 துளி கண்களில் விட குணமாகும். ➤ஆமணக்கு இலையுடன் கீழாநெல்லி இலையை சேர்த்து அரைத்து, எலுமிச்சம்பழம் அளவிற்கு காலையில் சாப்பிட்டு வந்தால், மஞ்சள் காமாலை குணமாகும். SHARE.

error: Content is protected !!