News March 17, 2025
அதிக நேரம் ரம்ஜான் நோன்பு இருப்பவர்கள் யார் தெரியுமா?

ரம்ஜான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை உண்ணாமல், நீர் அருந்தாமல் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். சூரிய உதயம், மறைவை பொறுத்து ஒவ்வொரு நாட்டிலும் நோன்பு நேரம் மாறுபடுகிறது. கிரீன்லாந்து, ஐஸ்லாந்து நாட்டு மக்கள் ஒருநாளில் 16 மணி 30 நிமிடங்கள் நோன்பு இருக்கிறார்களாம். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் 13 மணி 45 நிமிடங்கள் நோன்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 17, 2025
குறைந்தபட்சம் ரூ.10,000 பென்ஷன்.. ஏப்.1இல் புது திட்டம்

மத்திய அரசு பென்ஷன்தாரர்களுக்கு ஏப்.1 முதல் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் அமலாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, மத்திய அரசு பென்ஷன்தாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.10,000 பென்ஷன் கிடைக்குமாம். இதன் பயனைப் பெற ஏற்கெனவே தேசிய பென்ஷன் திட்டத்தில் இருப்போர், ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும், பிறகு தேசிய திட்டத்துக்கு மாற முடியாது எனவும் கூறப்படுகிறது.
News March 17, 2025
ஆபரேசன் மூலம் ஆண், பெண்ணாக மாற அனுமதியா?

மத்திய அரசால் 2019ஆம் ஆண்டில் திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன் 15ஆவது பிரிவில் பாலின மாற்று அறுவை சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை உள்ளிட்டவை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவில் ஆணாக பிறக்கும் ஒருவர் ஆபரேசன் மூலம் பெண்ணாக மாறவும், பெண்ணாக பிறக்கும் ஒருவர் ஆபரேசன் மூலம் ஆணாக மாறவும் இந்தப் பிரிவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
News March 17, 2025
கிருஷ்ணரின் போதனைகள் சக்தி அளித்தது: துளசி

மகாபாரதத்தில் அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் அளித்த போதனைகளே, தனக்கு சக்தி அளித்ததாக USA உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் கூறியுள்ளார். மகிழ்ச்சியான, இக்கட்டான நேரங்களில் பகவத் கீதை படிப்பதை வழக்கமாக வைத்திருப்பதாகவும், அதிலுள்ள போதனைகள் சக்தி, அமைதி, ஆறுதல் அளிப்பதாகவும் கூறினார். இந்தியா வந்தது மகிழ்ச்சி, இந்தியாவில் இருக்கும்போது சொந்த நாட்டில் இருப்பதாக உணர்கிறேன் என்றார் அவர்.