News March 19, 2024

ரூ.500 கோடி வசூலித்த முதல் படம் எது தெரியுமா?

image

இந்தியாவில் ரூ.500 கோடி வசூலித்த முதல் திரைப்படம், 2013ல் வெளியான அமீர்கானின் தூம் 3 திரைப்படம் தான். ரூ.175 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்தப் படம் தான், முதன்முதலில் Imax தொழில்நுட்பத்தில் டால்பி அட்மஸ் ஒளியமைப்பில் வெளியான படமாகும். படம் வெளியாகி, 10 நாள்களில் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலித்தது. இதையடுத்து, ரூ.500 கோடியைத் தாண்டியது. 2013ல் அதிக வசூலித்த படமும் இதுதான்.

Similar News

News September 7, 2025

அதிமுகவை கூறு போட்ட பாஜக: உதயநிதி

image

சென்னை கலைஞர் அரங்கத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய DCM உதயநிதி ஸ்டாலின் வரும் தேர்தலுக்காக முழுவீச்சில் செயல்பட்டால், 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் எனவும், அதற்கான நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சியை குறித்து பேசிய அவர், அதிமுகவை பாஜக கூறு போட்டுவிட்டதாக DCM உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார்.

News September 7, 2025

இபிஎஸ்-ஐ நாங்கள் நீக்குவோம்: புகழேந்தி

image

EPS ஒன்றும் அதிமுகவுக்கு சொந்தக்காரர் அல்ல என்று பெங்களூரு புகழேந்தி கூறியுள்ளார். செங்கோட்டையனை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்த அவர், தங்கமணியும், வேலுமணியும் சேர்ந்து EPS-ஐ இயக்குவதாக சாடினார். அத்துடன், உண்மையான அதிமுகவின் தொண்டர்கள் செங்கோட்டையன் பக்கம் நிற்பதாக கூறிய அவர், நாங்கள் எல்லோரும் சேர்ந்து பழனிசாமியை ஓரம் கட்டுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

News September 7, 2025

கழுத்து வலியை விரட்டும் யோகா!

image

முதுகு வலி, கழுத்து வலி உள்ளவர்கள் பிறையாசனத்தை செய்தால், நிவாரணம் கிடைக்கும். இந்த ஆசனம் செய்யும்போது உடல் பிறை நிலவு போல் இருப்பதால் இதற்கு பிறையாசனம் என்று பெயர்.
*முதலில் நேராக நின்று, இரு கைகளையும் மேலே உயர்த்தவும். *அடுத்து முதுகை பின்னோக்கி வளைக்கவும்.
*மெல்ல கைகளை கால் முட்டியின் பின்புறத்தில் வைக்கவும் *இந்த நிலையில் 20 வினாடிகள் இருந்து விட்டு, பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.

error: Content is protected !!