News October 6, 2025
தமிழ்நாடு மது விற்பனையில் எந்த இடம் தெரியுமா?

2025 நிதியாண்டில் மாநிலம் வாரியாக, விஸ்கி, வோட்கா, ரம், ஜின், பிராந்தி போன்ற மதுபானங்கள் விற்பனை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இதில், தென்னிந்திய மாநிலங்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ளன. எந்த மாநிலம் எந்த இடத்தில் உள்ளது என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், கடைசி இடம் யாருக்கு தெரியுமா? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News October 6, 2025
விஜய்யால் மாறும் கூட்டணி கணக்குகள்(1/2)

BJP-யின் கூட்டணி ஆட்சி டிமாண்ட், செங்கோட்டையன் போர்க்கொடி போன்றவற்றால் பின்தங்கியிருந்தார் EPS. விஜய் ஆதரவு நிலைப்பாட்டுக்கு பிறகு, களத்தில் தவெகவினர் காட்டும் இணக்கம் EPS-க்கு புது எனர்ஜியை கொடுத்துள்ளது. திமிறும் தேமுதிக, உடைந்த பாமகவை விட விஜய் வருகை, NDA-வை பலப்படுத்தும் என நம்புகிறார். விஜய் பேசுபொருளானதால், அதிமுக உள்கட்சி பிரச்னைகள் மறக்கப்பட்டதும் EPS-க்கு சாதகமே.
News October 6, 2025
விஜய்யால் மாறும் கூட்டணி கணக்குகள் (2/2)

விஜய்யை NDA நெருங்குகிறது என்ற ஊகம் கூட்டணி கணக்குகளை மாற்றியுள்ளது. EPS பிடிவாதத்தால் NDA–வில் இருந்து வெளியேறிய TTV, விஜய்யை ஒரு ஆப்ஷனாக முன்னிறுத்தி, பாஜகவிடம் தன் பேர வலிமையை காட்டினார். தற்போது, விஜய்க்கு ஆதரவாக NDA-வில் நடக்கும் நகர்வுகள், TTV–க்கான டிமாண்டை குறைத்துள்ளன. இதனால் தனித்து விடப்படுவோமோ என்ற எச்சரிக்கையால், பரம எதிரி திமுக பக்கம் பார்வையை திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
News October 6, 2025
ஒரே நாளில் ₹2,000 உயர்வு.. புதிய உச்சம் தொட்டது

தங்கம் விலைக்கு ஈடுகொடுக்கும் வகையில் வெள்ளி விலையும் கடும் உயர்வை சந்தித்து வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று <<17930560>>சவரனுக்கு ₹1400<<>> அதிகரித்த நிலையில், பார் வெள்ளி கிலோ ₹2,000 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தற்போது, ஒரு கிராம் வெள்ளி ₹167-க்கும் ஒரு கிலோ ₹1.67 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்படியே போனா வெள்ளி வாங்குறது கஷ்டம்தான் போல..!