News March 23, 2025
பணக்கார ரயில்வே ஸ்டேஷன் எது தெரியுமா?

நாட்டில் அதிக வருவாய் ஈட்டும் ரயில்வே ஸ்டேஷன் எது தெரியுமா? தலைநகர் புதுடெல்லி தான். 2023–24 நிதியாண்டில் ₹3,337 கோடியை இந்த ரயில்வே ஸ்டேஷன் வருவாயாக ஈட்டியிருக்கிறது. மேலும் அந்த ஆண்டு 39,362,272 பயணிகளை கையாண்டு இருக்கிறது. இந்தப் பட்டியலில் ₹1,692 கோடி வருவாய் ஈட்டி, ஹவுரா ரயில்வே ஸ்டேஷன் 2வது இடத்தில் இருக்கிறது. 3வது, 4வது இடங்களில் முறையே சென்னை சென்ட்ரல், விஜயவாடா இடம்பிடித்துள்ளன.
Similar News
News March 24, 2025
கிடுகிடுவென உயரும் பங்குச்சந்தைகள்

சில மாதங்களாக கடும் சரிவை கண்டுவந்த இந்திய பங்குச்சந்தைகள், கடந்த ஒரு வாரமாக மேல் நோக்கி உயர்ந்து வருகின்றன. இன்றைய வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 23,658 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 77,984 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. வங்கிகளின் பங்கு விலைகள் இன்று கணிசமாக உயர்ந்தன.
News March 24, 2025
முதல் கறுப்பின பெண் எம்பி ‘மியா லவ்’ காலமானார்

அமெரிக்காவின் பிரபல அரசியல்வாதியும், முன்னாள் எம்பியுமான மியா லவ் (49) புற்றுநோய் பாதிப்பால் காலமானார். ஒஹையோ மாநிலத்தின் முதல் கறுப்பின எம்பி, வெள்ளையின ஆதிக்கம் கொண்ட குடியரசுக் கட்சியின் முதல் பெண் கறுப்பின எம்பி.யாகிய தனிச்சிறப்பு கொண்ட இவர் டிரம்ப்பை தொடர்ந்து விமர்சித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு அதிபர் டிரம்ப் உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
News March 24, 2025
திமுகவை மீண்டும் சீண்டிய சிபிஎம் மாநில தலைவர்

கடந்த சில மாதங்களாகவே திமுக மீதான விமர்சனங்களை CPM மாநில தலைவர் சண்முகம் தொடர்ந்து வைத்து வருகிறார். அந்த வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த நிதி நிலையை அரசு காரணம் காட்டுவது ஏற்புடையதல்ல என அவர் தெரிவித்துள்ளார். மேலும், நெல்லையில் சாதிய மோதல் இல்லை என சபாநாயகர் அப்பாவு சொல்வது உண்மைக்கு புறம்பானது எனவும் விமர்சித்துள்ளார்.