News April 12, 2024
மிகப்பெரிய புதுபிக்கத்தக்க எரிசக்தி மையம் எது தெரியுமா?

உலகிலேயே மிகப்பெரிய புதுப்பிக்க எரிசக்தி உற்பத்தி மையம், குஜராத்தின் காவ்டா பகுதியில் உள்ளது. அதானி குழுமம் சார்பில் சூரிய மின்சக்தி மையம், காற்றாலை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையம் 538 சதுர கிலோ மீட்டருக்கும் கூடுதலான நிலப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசுடன் ஒப்பிடுகையில் இது 5 மடங்கு பெரிதாகும். தற்போது அங்கு 2,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
Similar News
News January 20, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 20, தை 6 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: துவிதியை ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News January 20, 2026
சாய்னா நேவால் ஓய்வு!

நீண்டகால முழங்கால் பிரச்சனை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக போட்டிகளில் இருந்து விலகியிருந்த சாய்னா நேவால், தனது ஓய்வை உறுதிப்படுத்தியுள்ளார். இனி போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்பதை பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கூறியுள்ளார். கடைசியாக 2023-ம் ஆண்டு சிங்கப்பூர் ஓபன் போட்டியில் ஒரு போட்டி ஆட்டத்தில் விளையாடிய சாய்னா, ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் உட்பட மொத்தம் 24 சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளார்.
News January 20, 2026
இளமையான தோற்றம் பெற இது அவசியம்

அழகான மற்றும் இளமையான தோற்றம் கொண்ட சருமத்துக்கு, வெளிப்புறத் தோல் பராமரிப்பு மட்டுமே உதவாது. நாம் தினசரி உணவில் சரியான ஊட்டச்சத்து சேர்ப்பது மிகவும் அவசியம். குறிப்பாக, தோலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி கொண்ட உணவுகள் என்னென்னவென்று மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்கள். SHARE.


